பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. நியூயார்க் நகரப் பொது நூலகம்

எண்ணிறந்த நூல்களைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்ட நூலகங்கள் உலகில் பல உள்ளன. ஆயினும் நியூயார்க் நகர நூலகத்தின் அழகிய பளிங்குப் படிகளின் வழியாக உள்ளே செல்லும் யாவருக்கும் மன முவந்து அறிவு ஒளியைத் தரும் தன்மையை இதில் தவிர வேறு ஒன்றிலும் காண இயலாது. மிகப் பெரிய வரவேற்புக் கூடத்தில் பொன் எழுத்துக்களால் வரையப்பட்டுள்ள அறிக்கை ஒன்று "இந் நூலகம் எக் காலத்திலும் மக்களின் இலவச உபயோகத்திற்காக நிறுவப்பட்டுள்ளது" என்று கூறுகிறது. எல்லா மக்களின் நலனிற்காக இந் நூலகம் இயங்கி வருகிறது.

தாந்தே (Dante) என்ற கவிஞன் எழுதிய இன்பர்னே(Inforno) வின் முதல் படியோ (Copy), அன்றி அண்மையில் வெளியான துருக்கியர்களின் மாத வெளியீடோ, அல்லது உங்கள் விடுமுறையை எங்கு கழிக்கலாம் என்பது பற்றிய செய்தியைக் கொண்டிலங்கும் நூலோ ஆகிய இன்ன பிறவற்றை அங்கு அனைவரும் பெற்றுப் படித்து இன்புறலாம்.

இந் நூலகத்தின் சிறப்புமிக்க அறையில் அமர்ந்து ஒருவன் ஆராய்ச்சி செய்யும்பொழுது, வீதியில் காணும் எண்ணற்ற மக்களைப் போன்று அங்கும் அளவிறந்த மக்களுடன் பழகுகிறான்; சாமர் செட்மாம் (somerset Maugham) அவர்கள் அருகிலும், அரசாங்கத்திற்கு முடிவில்லாத புகாரைக் கொட்டை எழுத்துக்களில்