பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

நியூயார்க் பொது நூலகம் தியாகம், உணர்ச்சி, தொண்டு ஆகியவற்றின் கூட்டுறவால் எழுந்ததாகும். அது தோன்றிய வரலாறு பெருமை வாய்ந்தது. இங்கு நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நியூயார்க்கில் வாழ்ந்த சோசப் காக்சுவெல் (Joseph cogswell) என்ற பள்ளி ஆசிரியருக்குத் தோன்றியது. சான் சாகெப் ஆச்டர் (john Jacob aster) என்ற ஓய்வு பெற்ற கிழவர் ஒருவர் பொருளுதவி செய்ததின்பேரில் ஆச்டர் நூலகம் என்ற பெயர் கொண்ட நூலகம் ஒன்று தோன்றியது. காக்சுவெல் அதன் முதல் நூலகத் தலைவரானர். அந்த நூலகத்தை அவர் தன் குழந்தையெனப் பேணினார். தான் வியாதியால் நலிந்த காலத்திலும் கடுங் கோடையில்கூட நாள் முழுவதும் நூற்களைச் சேகரிக்கப் பாடுபட்டார். அவர் இறந்த பின்னர் ஆச்டர் குடும்பத்தாரின் ஆதரவில் அந் நூலகம் இயங்கி வந்தாலும், அப்பொழுதைய நிலையில் காக்சுவெல் கண்ட கனவு நிறைவேறும்போல் தோன்றவில்லை. இந் நிலையில் அதே நகரில் சேம்சு லெனக்சு என்ற ஓய்வுபெற்ற வணிகர் ஒருவரால் அறிஞர்களுக்கென மற்றொரு நூலகம் தொடங்கப்பட்டது. அப் பெரியார் நூல்களைச் சேகரிப்பதில் அளவிடற்கரிய ஆர்வம் காட்டினார். அவரது வீட்டில் ஒவ்வொரு அறையிலும் மேற்கூரை வரை நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மேலும் அவர் நூல்களைத தொகைவகை விரி செய்து அடுக்கியிருந்தார். அவரிடம் இருந்த நூல்கள் மிகவும் அருமையானதும் மதிப்பு மிக்கதும் ஆகும். அமெரிக்காவிற்கு வந்த முதல் கூடன்பர்க் விவிலிய நூல், பே என்பவரின் கிறித்துவ வேதப் பாடல்கள், வாசிங்டன் அவர்களின் வழியனுப்பு உரையின் கையெழுத்து ஏடு, கொலம்பசு தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததைத் தெரிவிக்கும் கடிதம்