பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவாகும். அப் பெரியார் நூல்களின் அருமையை உணர்ந்தவராதலின் தாம் சேகரித்த நூல்களைப் பக்கம் வேலையைத் தானே மேற்கொண்டிருந்தம். அவர் இறந்த பின்னரும் அதன் பாதுகாவலர்கள் பொது மக்களை அந்த நூலகத்தில் நுழைய அனுமதிக்கவில்லை. இவ்வாருக மக்கள் உள்ளே நுழைய முடியாத நிலையில் அந்த நூலகம் விளங்கியது.

விஞ்ஞானத்திலும் கல்வியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட மற்றொரு நியூயார்க் நகர வாசியான சாமுவெல் டில்டென் (Samuel Tilden) என்பவர் தமது உயிலில் தமது சொத்தை ஓர் இலவச நூலகம் அமைக்க உபயோகிக்குமாறு எழுதியிருந்தார். ஆனால் அவரது உறவினர்கள் உயிலுக்கு மாறாக நடந்ததால் ஒரு குறிப்பிட்ட தொகையே நூலகத்திற்காக ஒதுக்கப்பட்டது. இச் செயலினால் டில்டன் பெயரால் தனி நூலகம் ஒன்று ஏற்பட இயலாது போனலும், வழக்கறிஞர்களின் ஆலோசனையின்பேரில் ஆச்டர் நூலகத்துடன் அது இணைந்து நியூயார்க் பொது நூலகத்திற்கு வித்திட்டது. சின்னட்களில் லெனக்சு நூலகமும் ஆர்டர் நூலகத்துடன் இணைந்தது. நூலகம் விரிவடையத் தொடங்கிய பின்னரும் "இது ஏழை பணக்காரர் இருவருக்கும் பொதுவாகவும், யாவரும் மேற்கோள் குறிப்புக்கள் எடுப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் உரிய நிலையிலும் விளங்க வேண்டும்?" என்ற காக்சுவெல்லின் அடிப்படைக் கொள்கையிலேயே இயங்கத் தொடங்கியது பாராட்டுக் குரியதாகும்.

நியூயார்க் நகர மக்கள் அந் நகரின் நாற்பத்திரண்டாவது தெருவின் ஐந்தாவது சாலையில் நூலகக் கட்டடத்தை அமைக்கத் தீர்மானித்தனர். மிகப் பெரிய