பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

இந் நூலகத்தில் மேற்கோள் நூல்கள் பெருமளவிற்கு உள்ளன. இந் நூல்களை எடுத்துச் செல்லும் சலுகை உலக ஐக்கிய நாட்டு அவைக்குத் தவிர, உலகில் வேறு ஒரு அவைக்கோ, அன்றி, தனி மனிதனுக்கோ வழங்கப்படுவதில்லை. ஐக்கிய நாட்டு அவை ஒரு பெரிய நூலகத்தின் துணையின்றி இயங்க முடியாது. ஆதலால் ஐக்கிய நாட்டு அவைக்கு நூல்கள் வழங்கத் தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது சில சமயம் ஆராய்ச்சியாளர்கட்குத் தடையாக இருப்பினும், இந் நூலகம் ஓரளவிற்கு நூல்களை எப்பொழுதும் எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்கிறது. சிறந்த நூல்களை மிகவும் குறைந்த செலவில் புகைப்படம் எடுக்க வசதிகளும் இந் நூலகத்தில் உள்ளன.

பொது மக்கள் இரவு பத்துமணி வரை படிப்பகத்திலிருந்து படிக்கலாம். எல்லா வசதிகளும் அங்கு உண்டு. முக்கியமான அரசாங்க விடுமுறை நாட்களில்தான் இப் படிப்பகம் மூடப்பட்டிருக்கும். நாள்தோறும் இந் நூலகத்தைவிட்டுக் கடைசியில் வெளியேறுபவர் இந்நூலகத் தலைவராகத்தான் (Director) இருப்பார். ஒரு தடவை அவர் அவ்வாறு வெளியேறும்பொழுது, ஒருவன் இசைப் பகுதியில் செய்தி ஒன்றினை அறிதற்பொருட்டு வந்தான் என்றும், அதுகால் அவர் அவனை மலர்ந்த முகத்துடன் வரவேற்று, அவனுக்கு வேண்டிய செய்தியினை அறிந்து கொள்ளுதற்கு உதவினார் என்றும் இந் நூலகம் பற்றிய கட்டுரை ஒன்று பேசுகின்றது.

இந் நூலகத்திலிருந்து செய்திகள் பெறுவோரில் பெரும்பாலோர் நேரில் வருவதில்லை. நாடோறும் ஏறக் குறைய 1500 தடவை தொலைபேசி அழைப்பு வருகிறது. மேலும் நூலக அலுவலர்கள் 20 அல்லது 30 சாக்குக் கடிதங்களைக் கவனிக்கிறார்கள். எல்லா விடயங்களைப்