பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

பற்றியும் உலகம் முழுவதினின்றும் கடிதங்கள் வருகின்றன. பெர்மூடாவிலிருந்து பொறி இயல் வல்லுநர்கள் எக்ச்ரே கதிரினின்று பாதுகாப்புப்பற்றித் தகவல் விசாரிக்கிறார்கள். கனடாவில் வாழும் ஒருவன் சைனாப் பெண்ணுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் முறை பற்றி கவி கேட்கிறான். இலண்டன் நகர மாணவன் ஒருவன் தான் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்துவரும் ஒரு பொருளைப் பற்றிக் கேட்கிறான். இவ்வாறு ஆயிரக்கணக்கில் வரும் கடிதங்களைக் கவனித்து நூலகத்தார் கவனமாகவும் இலவசமாகவும் பதில் அனுப்புகிறார்கள்.

இந் நூலகத்தின் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாக விளங்கிய டாக்டர் பிலிங்சையும், அவரது கொள்கைகளையும், அவர் ஆற்றிய பணிகளையும் ஒருவரும் மறப்பதில்லை. 1911-இல் நியூயார்க் பொது நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. அப்பொழுது டாக்டர் பிலிங்சு தமது எழுபதாவது வயதைத் தாண்டிவிட்டார். அப்படி இருந்தும் அவர் ஆர்வத்துடன் அவ்விழாவில் கலந்து கொண்டார்.

1940-ஆம் ஆண்டு இந் நூலகத்தின் பொருளாதார நிலைமை போதுமானதாக இல்லை. ஆனால் அதன் பொருட்டு நூலகத்தார் சிக்கன முறைகளைக் கைக் கொண்டு நூலகத்தின் வளர்ச்சியைத் தடைசெய்தாரில்லை. அன்றியும் நூலக அலுவலர்களுக்கு மாத ஊதியத்தை அதிகப்படுத்திப் பற்றாக் குறையை மிகைப்படுத்திக்கொண்டனர். இதன் காரணமாய் நூலகத்தார் பொது மக்களின் உதவியை நாடினர். வங்கிகள் (Banks) நடத்துவோர், கலைஞர்கள், நூல் வெளியீட்டாளர், எழுத்தாளர்கள் முதலிய பலரும் இந் நூலகத்தின் உதவியை எந்நாளும் வேண்டி வருபவர்களாக இருப்பதால், அவர்கள் அனைவரும் மனமுவந்து உதவினர். மேலும்