பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

1940-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வேறொரு முறையில் பல்கலைக்கழக நூலகம் தொடங்கியது. பிரெளண் பல்கலைக்கழக நூலகம், கொலரோடா பல்கலைக்கழக நூலகம், நிப்ரோச்சா பல்கலைககழக நூலகம் ஆகியவை புதிய முறையிலே அமைக்கப்பட்ட நூலகங்களாகும். இந்தப் புதிய முறையின் முக்கிய அடிப்படை நூலகத்தைப் பேரளவில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே. இத்தகைய நூலகங்களிலே மூன்று குறிப்பிடத் தக்க படிப்பகங்கள் உள. அவற்றுள் ஒன்று மக்களியலுக்குரியது; மற்றென்று அறிவியலுக்குரியது; மூன்றாவதாக உள்ளது கலையியலுக்குரியது. இந்தப் படிப்பகங்களில், குறிப்பு நூல்கள், நூல் விவரத்தொகுதிகள், ஒதுக்கப்பட்ட நூல்கள் ஆகியன இருக்கும். அதனால் குறிப்பிட்ட ஒரு பாடத்துக்கு வேண்டிய அத்துணை நூல்களும், குறிப்புக்களும் ஒரு சேர ஆராய்ச்சி மானவர்க்குக் கிடைக்க வாய்ப்பு ஏற்படுதல் கண்கூடு. இத்தகைய புதுமுறைப் பல்கலைக்கழக நூலகங்களிலே இவற்றோடு, புகுமுக மாணவர்க்கு வேண்டிய படிப்பகங்கங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.

பெரும்பான்மையான பல்கலைக்கழக நூலகங்களிலே வட்ட, மாவட்ட, மாநில அரசுகளின் அறிக்கைகளும் வெளியீடுகளும் சேர்த்துவைப்பதற்குரிய தனி அறைகள் காணப்படுகின்றன. அமெரிக்க நாட்டின் அறிக்கைகளுக்கு மட்டுமே உரிய அறைகள் ஒவ்வொரு பல்கலைக் கழக நூலகத்திலேயும் உள. அங்குமட்டன்று, கல்லூரி நூலகங்களிலும் இத்தகைய அறைகள் உண்டு. இவற்றுக்கு என்றே ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட்டுளது. இவ்வாறு கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அறைகளின் எண்ணிக்கை தற்போது 556 ஆகும்.