பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைந்த ஓர் குண்டானையும், குழம்பு நிறைந்த குவளையையும் கடைசியில் உள்ளேயிருத்தவன் கொடுக்கிறான். மண்ணாங்கட்டி அவ்விரண்டையும் சன்னலின் எதிரிலேயே வைத்து விடுகிறான். அவன் அறையைவிட்டு வெளிவருகிறான். மண்ணாங்கட்டி நழுகி எதிரில் மரத்தில் மறைந்து கொள்ளுகிறான். வந்தவன், சோற்றுக்குண்டானையும், குழம்புக் குவளையையும் தூக்கிக்கொண்டு தன் துணைவனைத் தேடிச் சிறிது நகருகிறான். அவன் இல்லாததால் இன்னும் சிறிது நகருகிறான். உடனே அவனை நோக்கி ஒரு கல் சீறி வந்து எதிரில் விழுகிறது. மற்றொன்று, இன்னொன்று. குண்டானோடும் குவளையோடும் அவன் கம்பி நீட்டுகிறான். மண்ணாங்கட்டி வேறு புறமாகச் செல்லுகிறான்.

12