இவைகளைக் கையால் தாவிப் பறித்து உண்கிறார்கள். அவர்களின் கண்கள் எவனுக்கோ அஞ்சுகின்றன.
ஒருவன் கையில் தடியுடன் வருகிறான். மக்கள் ஓடி ஒளிகிறார்கள். வேறு புறம் மண்ணாங்கட்டி செல்லுகிறான்.
பழுக்காத பனங்காயைப் பலர் பல்லாற் கடித்துக் கிடக்கின்றனர், மற்றும் சிலர் பச்சோலையைத் தின்கின்றனர். மண்ணாங்கட்டி மெய் நடுங்குகிறான். அவன் மறுபுறம் நடக்கின்றான்.
பெரியதோர் மாடிவீடு, அதையடுத்துப் பல "பொருட்காப்பு விடுதி" கள், தோன்றுகின்றன. மாடி வீட்டின் வாயிலில் நிறைய மக்கள் கெஞ்சிய முகத்தோடும், துணி விரித்து ஏந்திய கையோடும் மொய்த்திருக்கின்றார்கள். சிலர் கூழ் ஏந்தும் சிறு பானையுடன் ஏங்கியிருக்கின்றனர். வேறு புகல் இல்லையென்னும் நிலையில் பலர் வாயிலின் நேரில் உட்கார்ந்திருக்கின்றனர். மற்றும் பலர் உட்கார்ந்திருக்க வலியின்றிப் படுத்திருக்கின்றனர். மண்ணாங்கட்டி நின்று பார்க்கிறான். அவன் முகம் கருமையடைகின்றது. சிறிது நேரம் செல்ல மாடிவீட்டினின்று ஒருவன் கையிற் கோலுடன் ஏழை மக்களை நோக்கிச் சினத்துடன் வருகின்றான். மக்கள் அஞ்சிப் பறக்கின்றார்கள், அவன் உள்ளே போகின்றான். மீண்டும் ஏழை மக்கள் மாடிவீட்டை மொய்க்கின்றார்கள். மண்ணாங்கட்டி மேலும் நடக்கின்றான் விரைவாக!
ஒரு கல் தொலைவு செல்லுகின்றான். மற்றொரு வீட்டைக் காண்கின்றான். அங்கும் காணுகின்றான், கையேந்தி நிற்கும் ஏழைமக்களை மண்ணாங்கட்டி
17