பதிமூன்று
மறுநாள் ஏரியில் மக்கள் வேலைசெய்வதையும், வேலை செய்வோருக்குச் சோறு ஆக்கப்படுவதையும், பார்த்துக் கொண்டு, அன்றிரவு பின்புறமாக மடியில் ஒரு பூனைக்குட்டியுடன் வீட்டின் மாடியில் ஏறுகிறான்.
பெரியபண்ணையார் சாப்பாட்டு மேசையின் எதிரில் வந்து உட்காருகிறார். அவர் எதிரில் ஒரு பூனைக்குட்டி, உலவுகிறது! அதன் கழுத்தில் ஒரு கடிதம் தொங்குகிறது. பூனைக்குட்டியைப் பிடித்து அந்தக் கடிதத்தைப் படிக்கிறார். அவர் முகம் எரிகிறது. என்னமோ நினைக்கிறார். கடிதத்தை மேசைமேல் வைத்துவிட்டு, அலமாரியைத் திறந்து சாராயச் சீசாவை எடுத்து, அதைத் திறந்து சாராயத்தையெல்லாம் நீர் விழும் தூம்பில் ஊற்றிவிட்டு அதில் நிறையத் தண்ணீர் ஊற்றி எதிரில் வைத்துக் கொள்ளுகிறார். கறிகள், சோறு வருகின்றன. மனைவி வருகிறாள். சாராயம் என்று எண்ணி, தண்ணீரை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள் கணவனுக்கு! அவன் உண்டு, மயங்கியவன்போல் மேலுக்குக் காட்டுகிறான். மனைவி கணவனைத் தூக்கிக் கட்டிலில் போட்டு உடை உடுத்து முகம் திருத்தி, கரும் பட்டால் முக்காடிட்டு மாடி விட்டு இறங்குகிறாள். இறங்குகையில் மேசையின் கீழே விழுந்து கிடக்கும் கடிதத்தையும் எடுத்துக் கொண்டு போகிறாள். அவள் வண்டியில் ஏறுகிறாள்.
24