உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதினைந்து

ரவு பத்து மணியாகிறது பெரிய பண்ணையார் வீட்டு மணிப்பொறியில்! நகரத்தினின்று 100 குதிரைகள் பெரிய பண்ணையாரின் வீட்டை நோக்கி வருகின்றன. குதிரைகளினின்று இறங்கிய அரசினர் பெரிய பண்ணையாரைச் சூழ்ந்துகொள்ளுகிறார்கள். அவர் இருகாவலர்பால் ஒப்படைக்கப்படுகிறார். மற்றும் காவலர் பலரும், ஏழை மக்களின் வீட்டுக்கிருவர் விழுக்காடு சூழ்ந்து கொள்ளுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் தந்தை தாய் பிள்ளைகளும் ஒன்று சேர்த்துச் சங்கிலியால் பிணிக்கப்படுகிறார்கள். ஏழை மக்களின் குடும்பங்கள் அனைத்தும் பிணிக்கப்படுகின்றன. மண்ணாங்கட்டி கண்ணீர் விடுகிறான். ஒருபுறமாக ஓடுகிறான். வேறுபுறமாக ஓடி வருகிறான்.

இதே நேரத்தில், மண்டையுடைத்த குறவனை இருவர், அவன் கைகளைக் கட்டியபடி பிடித்து வருகிறார்கள். ஊரில் காவலர் நிறைந்திருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். ஆயினும் அவர்கள் அக்குறவனை ஊரின் அருகிலிருந்த மாந்தோப்பில் ஒருமரத்தில் கட்டி விட்டுச் சிறிது தொலைவில் உட்காருகிறார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் உறங்கத் தொடங்குகிறார்கள். இதைக் கண்ட மண்ணாங்கட்டியின் முகம் துன்பக் கடலில் மூழ்குகிறது. அவன் தன் இடையில் இருந்த இறகு தாள் எடுத்து ஏதோ எழுதுகிறான், எழுதிய தாளோடு தான் எடுத்த சுழல் துப்பாக்கியையும் சேர்த்துக் கட்டுகிறான். பெரிய பண்ணையாரைச் சூழ்ந்-

28