பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிழக்கில் இளங்கதிர் தலை நீட்டுகின்றது. மண்ணாங்கட்டிக்குக் காவல் இருப்போர் கிழக்கே பார்க்கிறார்கள். அதே நேரத்தில் ஏரிக்குப் புறத்திலுள்ள சிற்றூருக்குச் சென்ற காவல் தலைவன், ஊரில் நுழைகிறான்.

மண்ணாங்கட்டியை நோக்கி விரைவாகக் கையில் தடியுடன் வருகிறார்கள் முன்னே அடித்தவர்கள்; மற்றும் வேலையைத் தொடங்குகிறார்கள். மண்ணாங்கட்டி, விலங்கிடப்பட்ட மக்கள்பால் செலுத்திய ஆவல் முகம் திடுக்கென அதிர்கிறது. மண்ணாங்கட்டியின் உடலில் ஓங்கியடிக்கும் தடிகள், உடலிலேயே பதிகின்றன. அவன் தலையில் செந்நீர் அருவி இழிகின்றது. மண்ணாங்கட்டி ஆவலோடு ஏழைமக்களின் நிலையைப் பார்க்கிறான். அவன் கழுத்து, தலையைச் சுமக்க மறுத்துவிடுகிறது. தொங்குகின்ற தலையிலிருக்கும் விழிகள் ஏழைமக்களின் வீட்டை நோக்குகின்றன. மற்றோர் அடி மண்ணாங்கட்டியின் தலையில் விழுகிறது.

வீடுதோறும் சங்கிலியாற் பிணித்து நிறுத்தப் பட்டிருந்த ஏழை மக்கட்கு மீட்சி கிடைக்கின்றது. காவலர்கள் அவர்களின் விலங்குகளை அகற்று கின்றார்கள். விடுபட்ட ஏழைமக்கள் ஒன்று கூடுகின்றார்கள். அவர்கள் கண்கள் யாரையோ தேடுகின்றன. கூட்டம் அங்குமிங்கும் போகின்றது. தோப்பை நோக்கி ஆவலாக அவர்கள் ஓடிவருகிறார்கள். காலைக் கதிர் வெளிச்சம் காட்டுகின்றது.

தோள்மேல் விழுந்து கிடந்து, செங்குருதி ஒழுக விழிகள், விடுபட்ட மக்களை நோக்குகின்றன. மண்ணாங்கட்டியின் இதழ் விலகுகிறது. முத்துப்

31