இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பற்கள் திகழ்கின்றன. வாய்க்கடையிற் சிரிப்பு மின்னுகிறது. கண்ணில் பெருமகிழ்ச்சி மலர்கிறது. அவன் தலை நிமிர்ந்தது! ஆயினும் பழையபடி வீழ்ந்தது. மக்கள் ஓடி மொய்த்துக் கட்டவிழ்த்தார்கள். அடித்தவர்கள் கண்களில் அச்சமும், வியப்பும் தோன்றுகின்றன. அவர்கள் கையுதறுகிறர்கள், மண்ணாங்கட்டியின் தலை மற்றொரு முறை திமிருமா! இல்லை! அவள் நீண்ட அமைதியில் நிலைத்துவிட்டான்,
ஏழை மக்கள் அள்ளி யணைத்த மண்ணாங்கட்டி பத்தரைமாற்றுப் பொன்னாங்கட்டி!
*Printed at the Co-operative Press Ltd, Pudukottai