பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஊர்ப் பொதுச் சாவடியில் சிலர் மூட்டை முடிச்சுகளுடன் துயிலுகிறர்கள் ஆயினும், அவர்களில் ஒரு கணவனும் மாைனியும் துயில் நீங்கி எழுந்து மற்றவர்கள் துயில்வதையும் அவர்களின் அண்டையில் மூட்டை முடிச்சுகள் கேட்பாரற்றுக் கிடப்பதையும் பார்க்கிறீர்கள். அந்த மூட்டைகளிற் சிலவற்றைத் திருடிச்சென்று சிறிது தொலைவிலுள்ள ஆலமரத்தின் வேரில் மறைத்து மீண்டும் துயில்வாரோடு தாமும் வந்து துயில்கிஞர்கள். கிழக்கு வெளுக்கிறது. ஆலமரத்தை நோக்கி ஒரு கணவனும் அவன் மனைவியும் சுற்று முற்றும் பார்த்தபடி வருகிறர்கள். அவர்கள் திருடிப் பதுக்கிய மூட்டைகளைக் காணுகிருர்கள். அம் மூட்டைகளின் அண்டையில் வண்டு விழிகாட்டி மலர்முகம் காட்டிச் சிறிய மலர்க் கைகளும் கால்களும் அசைத்துக் கிடக்கும் ஒரு குழந்தை யையும், குழந்தையின் அண்டையில், சில தங்க தகைகளும் பணமும் கிடப்பதையும், காணுகிறர்கள். மனைவி குழந்தையை வாரி அணைத்து முத்த மிடுகிறள், கணவன் முகம் மகிழ்ச்சி கொள்ளு கிறது. ஆலமரத்தின்மேல் ஒரு நெஞ்சம் பூரித்துப் போகிறது.

பிள்ளையையும், பணம், தகை மூட்டைகளையும் எடுத்துக்கொண்டு கணவனும் மனைவியும் போகிறீர்கள். ஆலமரத்தை விட்டு இறங்கிய மண்ணுங்கட்டி வேறு புறம் செல்லுகிறன்.

8