பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 அம்பிகாபதி காதல் காப்பியம்


பாடங் கேட்டபின் பள்ளியின் வீட்டிற்கு

ஓடும் இளைஞரின் உவப்பொலி கேட்டனர்;

பானினைந் தூட்டும் பண்புறு தாய்போல்}}

45 ஆணினம் கன்றினை அகத்துள் நினைந்து

கானெனப் பாலினைக் கான்று கொண்டே

மந்தையி னின்றும் மனையை நோக்கிப்

பந்தி பந்தியாய் வருவதைப் பார்த்தனர்;

கம்பரும் கண்ணரும் காய்ந்து கருகி}}

50 வெம்பி விடுவர் வெய்யிலில் என்று

மப்பு பரவி மந்தாரம் போட்டதால்

தப்பி வெயிலின் தண்ணென நடந்தனர்;

ஊரின் பாங்கர் உள்ளதோர் பொதும்பரில்

நீரின் கரையில் நின்றனர் இருவரும்;

55 ஓடும் ஒடைநீர் ஒலிக்க முழவென,

பாடுபுள் பூவை பரப்ப இசையின,

ஆடும் மயிலின் ஆட்டம் சுவைத்தனர்.

கம்பர் நண்பரை நோக்கிக் கழறுவார்; இஃது,

அன்னமோ மஞ்ஞையோ ஆடுவதாக

60 முன்னைப் புலவோர் மொழிந்துள செய்தியே.

ஏத்தும் மணிமேகலை என்னும் நூலில்

கூத்தாட் டொன்று கூறப்பட் டுளதால் :

"குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட

மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய

65 மயிலா டரங்கின் மந்தி காண்பனகண்'

என்று சாத்தனர் இனிக்க எழுதினர்.42. பள்ளியின் - பள்ளிக்கூடத்திலிருந்து. 44. பானினைந்து - பால் நினைத்து. 45- ஆவினம் - பசுஇனம் ஆண்டி 46. கான் . நீர்வருங் குழாய்; கான்று - சொந்து. 47. மந்கை - மந்தைவெளி 48. பந்தி பந்தியாய் - வரிசை வரிசையாய். 52 வெயிலின் - வெய்யிலிலிருந்து; தண்ணென - குளிர்ச்சியாக, 55. முழவு - மத்தளம். 56. பூவை - பாடும் பறவை. 58. கழறுவார் - சொல்லுவார். 59. மஞ்ஞை-மியில். 61. ஏத்தும் - போற்றும். 3ே. கூத்தாட்டு - நடனம். 63. தும்பி - வண்டு. 65. அரங்கு - கலை நிகழிடம்.