பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அம்பிகாபதி காதல் காப்பியம்


50 வெண்ணிலா தெரியுமிவ் வியப்பை என்சொல
என்னவே, மெல்லிடை இனைந்தனள் போல,
என்முகம் மதியை ஏய்ப்ப உளதென
என்முகம் பழித்தனிர் என்செய்வேனென,
உன்முகம் பழித்ததாய் உரைப்பதெவ் வாறென,

55 விண்ணுறு திங்களில் வியன்கறை யுள்ளது
என்னுறு முகத்தில் களங்கம் என்னென,
புரியா துரைத்தேன் பொறுத்தருள் புரிகென,
இருவரும் கலகல என்று நகைத்தபின்,
பொருவரும் எழிலாள் புன்னகை புரிந்தே


60 பகற்பொழு தாயின் பகலவன் தனைநும்
முகத்திற் கொப்பாய் மொழிந்திடு வேனென,

(அம்பிகாபதி)

அங்ஙன மாயின் அடுகதிர் ஞாயிறும்
திங்களாம் தண்கதிர் தானும் திரிந்தே
ஒன்றி நெருங்கி ஓரிடந் தன்னில்
65 துன்றி யிருப்பதாய்ச் சொல்லலாம் என்ன,

(அமராவதி)

இருவேறு கதிர்களும் இயைந்திணைந் திருப்பதோ
ஒருபோதும் இலையென ஒண்டொடி உரைக்க,

(அம்பிகாபதி)

இதுபோ தியான்நம் இளங்கோ இயற்றிய
மதுபோ தைதரும் மாண்புறு நூலாம்


51. மெல்லிடை - அமராவதி; இனைந்தனள் - வருந்தினள். 53. ஏய்ப்ப - ஒப்ப, 55. வியன்கறை - பெரிய கறுப்புக் கறை. 59. பொருவரும் - ஒப்பு சொல்ல முடியாத 60. பகலவன் - ஞாயிறு. 82. அடுகதிர் - கடும் ஞாயிறு. 63. திங்கள் - நிலா; தண்கதிர் - குளிர்ந்த கோள்; திரிந்து - நிலைமாறி. 67. ஒண்டொடி - அமராவதி.