பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

அம்பிகாபதி காதல் காப்பியம்

(அம்பிகாபதி)

உண்மைநீ யுரைப்பது முற்றும் உண்மை

95 அண்மையில் அழிவிலை அன்றிலா யிணைவோம்;
முழுநிலா நிகர அகவை முழுவதும்
முழுவாழ்வு வாழ்வம் என்றவன் மொழிந்திட,

(அமராவதி)

சென்ற முழுநிலா நாளில், சேர்வம்
என்று சிறிதும் எண்ணினோ மல்லோம்

190 இந்த முழுநிலா நாளில் ஈண்டு
வந்து சேர்ந்தனம் வாழத் துடிக்கிறோம்
அடுத்த முமுநிலா நாட்குள் அடுப்பதை
எடுத்து மொழிய எவரால் இயலும்?
நமைப்போல் இத்தகு முழுநிலா நாளில்

195 அமைப்பாய்ப் பலபட் டறிவு பெற்றோர்,
இன்று வந்ததும் அதேநிலா இல்லையோ?
அன்று வந்ததும் இதே நிலா அல்லவா?
என்று பாடுவோர் எத்துணை யோரோ?
என்று பூங்குழல் இயம்ப, அம்பி,

105 நன்று, கூறுவேன் நானொரு மாக்கதை:
புறநானூறெனும் புறப்பொருள் நூலில்
மறலியும் இரங்கி மருளும் வண்ணம்
பாரி மகளிர் பாடி யுள்ள
நேரில் ஒருபா நெஞ்சையள்ளுமால்;

115 தந்தை பாரியைத் தாக்கிக் கொன்று

96. நிகர - ஒப்ப. 104. முழுநிலா நாள் - பெளர்ணமி. 105. பட்டறிவு - அனுபவம். 10.9 பூங்குழல் - அமராவதி. 111. புறப்பொருன் - காதல் வாழ்க்கையாம் அகப்பொருளுக்குப்புறம்பான மற்ற வாழ்க்கைநீலை. 112. மறலி - எமன்; மருளுதல் - மிரளுதல், மயங்குதல். 114. நேரில் - நேர் இல் - ஒப்பில்லாத.