பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதலர்கள் களிப்புறூஉம் காதை

113

“நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்ருள் இவள்”என்பது குறள்.
இதன் பொருள் தன்னை இயம்பக் கேணி.

160 “(உலகியலுக்கு மாறாக) விட்டு நீங்கினால் சுடுவதும்
கிட்ட நெருங்கினால் குளிர்வது மாகிய (காமத்) தீயை
இவள் எங்குப் பெற்றாளோ?”
என்பது பொருளாம்; இதற்கு மாறாக,
யானுனைக் குறுகி யிருக்குங் காலையே
நீயெனைச் சுடுகிருய்! நெருங்கின் சுடுவது
உலக உண்மையென் னுடம்பெலாம் கொதிக்குமால்;

165 இதுதான் காமத் தீயோ என்னவோ!
இதுபோ தாதென எனைச்சுடும் திங்களும்:
விலகி யிருப்போர்க்கு வெப்பந் தந்திடும்
குலவி மகிழ்வோர்க்குக் குளிர்ச்சி நல்கிடும்
என்பதாய் இலக்கிய ஏட்டில் படித்துளேன்

170 தின்பதா யுள்ளது திங்களோ என்னை!
கட்டித் தழுவின் காமத் தீச்சுடர்
எட்டி விலகுமென் றெண்ணு வலியான்
என்றம் பிகாபதி இயம்பிய வேளையில்,
வெடியொலி யோவென வெருளும் வண்ணம்

175 திடுமெனும் பேரொலி திடீரெனக் கேட்கவே,
அஞ்சி அமராவதி அதிர்ச்சியுற் றெழுந்தாள்;
மஞ்சுறு அம்பியும் மருண்டே எழுந்தான்.
அமரா வதிதன் அச்சம் நீக்கவும்
அம்பி அவளுறு அச்சம் போக்கவும்

180 எண்ணினர் ஒருமித் திறுகத் தழுவ;
அண்ணலும் புல்லினான் அவளும் புல்லினாள்.
முன்னர்ப் புல்லியோர் யாரென மொழிவது

159. கேணி - கேள்நீ 166. திங்களும் - சந்திரனும். 174. வெருளுதல் - மருளுதல், அஞ்சுதல். 177. மஞ்சு - வலிமை, 180. மூழுதும் - ஒருசேர இறுக்கமாய்த் தழுவ எண்ணினர். 181. புல்லுதல் - அணைத்தல்.

அ.—8