பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அம்பிகாபதி காதல் காப்பியம்



ஒண்ணா தங்ஙனம் ஒன்றித் தழுவினர். பின்னர் அறிந்தனர் பேரொலி யாதென:

185 தெங்கங் காயொன்று திடீரென விழுந்தே அங்ஙனம் அவர்தமை அச்சுறுத் தியதால். தெங்குதரு தழுவல் தித்திக்கத் தித்திக்க அங்குநின் றகலா தணைத்தே யிருந்தனர்; இதழோ டிதழ்சுவைத் திப்புவி மறந்தனர்;

190 இதழினின் றிதழை இழுத்துப் பிரித்தே அகத்துறு ஆவல் அடங்க அவளது முகத்துக் கன்னம் முழுவதும் அம்பி முத்த மாரியை முகிலாய்ப் பொழிந்தான். மெத்தவும் நாணிய மின்னிடை வேண்டுவாள்:

195 கன்னம் கவ்வாதீர் காட்டிக் கொடுத்திடும்; இன்னமும் முத்தம் ஈதல் வேண்டா; அளவு மீறின் அமிழ்தும் நஞ்சாம் உளவாய் நாளை உண்ணா துறுக அம்பியின் புணர்ச்சி வேட்கை அறிகிறேன்

200 தும்பிசூழ் இக்கா தோய்தல் வேண்டா கன்னி மாடக் கள்ளக் காப்பறை துன்னி நாளை தோய்வம் நாமே என்று கூறி இலங்கிழை வலிந்து கருமி கையின் காசுபறித் தாற்போல்

205 அருமையின் தன்னுடல் அம்பியின் பிரித்துச் சென்று வருவதாய்ச் செப்பி விடைபெற, நன்று நன்றென நம்பியும் போந்தனன்.


185. தெங்கங் காய் - தேங்காய். 187. தெங்கு தரு தழுவன் தேங்காயால் நேர்ந்த தழுவல். 189. இதழ் - உதடு; புவி - பூவுலகம். 192.அம்பி - அம்பிகாபதி. 193. மாரி மழை; முகில் - மேகம். 154. மின்னிடை - அமராவதி. 199. வேட்கை - அவா.200.தும்பி - வண்டு; தோய்தல் - புணர்தல். 201. காப்பறை - பாதுகாப்பான அறை. . 203. இலங்கிழை - அமராவதி. 204. கையின் - கையிலிருந்து. 205. அம்பியின் - அம்பிகாபதியினிடமிருந்து.