பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை 125


திறந்தெரிந் திங்கண் திடீரென வருவரோ?
களியாட் டயரும் கயவர் நேர
25 விளையாட் டயரும் வீணரே யாமும்!
என்று நினைத்தே ஏங்கித் தவித்தாள்
சென்றுபல் பாங்கரும் செம்மலைத் தேடினுள்
ஆட்டனத்தியைத் தேடிய ஆதி மந்திபோல்.
அஞ்ஞான்று,
காவலன் ஒருவன் கஞ்சுக உடையொடு
30 காவகத் துள்ளே கடுகி வருவதைக்
கண்டனள் உள்ளம் கலங்கி அச்சங்
கொண்டனள்; அவன்வரும் குறிக்கோள் யாதெனக்
கண்டிலள்; அம்பியைக் காவலன் வேந்திடம்
கொண்டுபோய் விட்டதைக் கூறி என்னை
35 விழிப்படை யச்செய வேண்டிவந் தனன்கொலோ!
பழிப்போ யானினி பாரினில் வாழ்வதோ!
ஒருவேளை,
என்கற் பழிக்க இவன்வரு கிறானே!
எனப்பல எண்ணி யிருக்கையில் அவளது
நினைப்பு போலவே நெடிதவன் உரைத்தான்:
அம்பி காபதி அரண்மனைப் பொழிற்கு
வந்ததைக் கண்ட வலியுறு நுந்தை
சிந்தை சினந்து சிறையில் அடைத்தார்
இதனைக் கூறவே இவணியான் வந்தேன்
மதன்செயல் அவரை மாட்டிய தென்ன,
45 அமரா வதிகேட் டவனிடம் உரைப்பாள்:

34. நேர - போல. 37. செம்மல் - சிறந்தோனாகிய அம்பிகாபதி. 28. முழுதும் - சோழ இளவரசியாகிய ஆதி மந்தி என்பவள், தன் கணவனும் சேர இளவரசனுமாகிய ஆட்டனத்தி என்பவன். காவிரி கயில் மூழ்கியபோது அவனேத் தேடியதாக வரலாறு கூறும். அஞ். ஒான்று - அப்போது. 39. கஞ்சுக உடை : சட்டை போட்ட சீருடை. 30. கடுகி விரைந்து. 83. காவலன் - சேவகன்; வேந்து . வேந்தன். 85. கொலோ - கொல் + இ = ஐயப் பொருள் தரும் இடைச் சொற்கள். 41. நுங்தை உம் தந்தை. 44. மதன் - மன்மதன்,