பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை 127


தன்னை யடையத் தக்க வழியிது

75 என்று கூறி இனிய நம்பியை
அள்ளிப் பருகும் அழகுறு நங்கை
உள்ளுக் கழைத்துச் சென்றனள் உவந்தே.
இந்த அறையினுள் எவரும் வாரார்;
எந்த நிகழ்ச்சி ஈண்டு நடப்பினும்

80 வெளியில் தெரியா விதமாய் அமைத்துளர்.
ஒளியும் வளியுமே உட்புக வியலும்
என்று மொழிந்தோர் இருக்கையில் அமர்த்தினாள்.
நன்றிவ் வறையென நம்பி வியந்தனன்;
திண்ணிய தரையும் திகழும் சுவரும்

85 வண்ண வண்ணப் பளிங்குக் கற்களால்
மண்ணி யுள்ளதை மகிழ்வொடு கண்டனன்;
வண்ண ஓவியங்கள் வாழும் சிலைகள்
ஓங்கும் அழகுடை ஒப்பனைப் பொருள்கள்
ஆங்காங்கு கண்டே ஆழ்ந்து சுவைத்தபின்,

90 தேக்கு நூக்கால் திண்ணிதின் குயிற்றி,
ஆக்கிய ஆரப் பலகைமேல் பரப்பி
மென்மையார் இலவ மெத்தை விரித்துப்
பன்மலர் தூவிப் பரப்பிய கட்டிலில்
அம்பிகா பதியை அமராவதி அமர்த்திச்

95 சிற்றுண்டி வகைபல செவ்விதின் ஊட்டி
முற்றும் பதமொடு முதிர்ந்தபல் கனிவகை
கண்டும் தேனும் கலந்த பாலொடு
உண்டற் கீந்துகண் டுவகை யுற்றனள்.
இருவிருந் துண்ட ஏந்தல் பின்னர்,

100 இருஇரு அசையா திப்படி யேயிரு
என்று நங்கைபால் இயம்பு, மற்றதன்


81.ஒளி - வெளிச்சம்; வளி - காற்று. 86. மண்ணி-ஒப்பனை (அலங்கரித்து) செய்து. 88.ஒப்பனைப் பொருள்கள் - அலங்காரப் பொருள்கள்.

90. தேக்கு, நூக்கு -மரவகைகள்; குயிற்றி - (கட்டிலைச்)செய்து. 91. ஆரப்பலகை - சந்தனப் பலகை.97. கண்டு - கற்கண்டு. 99. ஏந்தல்-அம்பிகாபதி.