பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 அம்பிகாபதி காதல் காப்பியம்

கொங்கையர் பின்னே குலவித் திரிந்தே
குழைந்து நிற்பவர் குமரர் தாமே!
நங்கையர்க் கடிமை ஆவார் என்றே
நவில வுந்தகும் ஆடவர் தமையே!

(5) பெண்பிறப்பே பெருமைய தாகும்
பேசுங்கால் பிறிதொப் பில்லை
பெண்ணின்பமே பேரின் பமாகும்
பிறவெல்லாம் பிணையா கும்மோ?

145 பெண்ணழகே பேரழ காகும்
பிறிதொன்றும் பிணையா காதே
பெண்ணுக்கோர் இணைகூ றென்னின்
பெண்ணொருத்தியே பேரிணை யாவளே!

என்றுபா டிக்கொண் டிருக்கும் போதே
நன்றுன் பாவென நம்பியாழ் வாங்கிக்
கொன்றாற் போலக் குறும்பாய்ப் பாடுவான்:

150 (1) ஆடவ ரின்றி அரிவையர் வாழ்வது
அரிதாம் என்பது அறிந்த உண்மை
ஈடிலாக் காளையர் இல்லா விடினோ
இரும்பெருந் தொழில்கள் இழைப்பவர் யாரோ?
பீடுறு கலைதமைப் பிள்ளைகள் நன்கு
பெற்றிடச் செய்யும் பெரியவர் யாரோ?
காடுறும் வரையும் காரிகை யாரைக்
கண்ணை யிமைபோல் காப்பவர் அவரே!

(2) அரிவையர் பின்னே அலகையாய்ச் சுற்றி
அலைபவர் ஆடவர் அனைவரும் அல்லர்
155 தெரிவுறின் காமம் தெரிவையர் தமக்கும்
தெவிட்டா ஒன்றெனத் தெரிகுவர் யாரும்


141. கொங்கையர் - பெண்கள்.144. பிணை-ஒப்பு- 146. இணை - ஒப்பு. 148. நம்பி - அம்பிகாபதி. 151. இழைப்பவர்-செய்பவர். 153.காடு - சுடுகாடு; காரிகையார் - பெண்கள். 154.அலகை - பேய். 155.தெரிவையர் - பெண்கள்.