பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 அம்பிகாபதி காதல் காப்பியம்


நன்னர் நோக்கி நலமில கிளத்துவான்:
பெரியீர் என்றன் பெட்புறு காதலி

50 இரியா தென்னை ஈண்டுளாள் பாரீர்!
சோழன் மகளாம் அமரா வதியொடு
தோழமை கொண்டேன் தோல்வி கண்டேன்.
வாய்திறந் தேதும் வகையாய்ப் பேசாள்
மாய்வுற என்னை மயக்குதல் செய்வாள்.

55 இவளை மணக்க ஏற்ற தோர்வழி
துவளும் எனக்குச் சொற்றிடு வீரென
வேந்தனாம் கிழவனின் கால்களில் வீழ்ந்தனன்;
காந்தும் உளத்தனாய்க் கலுழ்ந்தனன் கதறி.
சோழன் நோக்கிச் சோர்ந்து காலில்

60 வீழும் பித்தனை விரட்டிமேற் செல்வான்.
வழியிலோர் மனையில் கணவனும் மனைவியும்
இழிவாய்த் தமக்குள் ஏசிப் பேசுவர்:
நேரம் கழித்து நிசியில் வந்ததன்
காரணம் மனைவி கணவனைக் கேட்க,

(கணவன் கூறல்)

65 உன்தரு கிலேயே உட்கார்ந் திருக்க
அமரா வதியெனும் அழகியோ நீயென,

(மனைவி கூறல்)

அம்பிகா பதியெனும் அழகன் நீதான்
எனது பக்கலில் இருப்பா யோவென
அம்பிகா பதியையும் அமரா வதியையும்

70 இருவரும் இணைத்துப் பேசும் இழிவுரை


48. நவமில - நல்லதல்லாத பேச்சுக்கள் ; கிளத்துவான் - பேசுவான். 49. பெட்பு - அன்பு. 59. இரியாது - பிரியாது. 56.சொற்றிடுவீர்- சொல்லுவீர். 58. காந்தும் - எரியும்; கலுழ்ந்தனன்- அழுதான். 63. நிசி - (நடு) இரவு.