பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அம்பிகாபதி காதல் காப்பியம்


விசயாலயனுக்குப் பிறகு அவன் மகனாகிய முதலாம் ஆதித்தச் சோழன் (கி. பி. 871-907) படிப்படியாகப் பல்லவரை வென்று, சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் தன்னுடையனவாக்கிக் கொண்டான். இவனுக்குப் பல ஆண்டுகட்குப் பின்னால், முதலாம் இராசராசன் (985-1014) காலத்தில்தான் சோழ அரசு மிகப் பெரிய வல்லரசாகத் திகழத் தொடங்கியது. இது, முன்றாம் இராசேந்திரச் சோழன் (1247-1279) காலம் வரையும் நிலைத்திருந்து, பின்னர் வீழ்ச்சியுற்றுப் பாண்டியரால் பற்றப்பட்டது. இந்தச் செய்திகளின் அடிப்படையில் ஒரு முடிபு காண்பாம் :

இறுதிப் பல்லவனுகிய அபராசிதன் 897ஆம் ஆண்டுவரை பல்லவ நாட்டையும் சோழ நாட்டையும் ஆண்டிருக்கிறான். அபராசித பல்லவனைக் கொன்ற முதலாம் ஆதித்தச்சோழன் 907ஆம் ஆண்டுவரை ஆண்டிருக்கிறான். எனவே, சோழப் பேரரசு பிற்காலத்தில் மீண்டும் உருவாகத் தொடங்கிய காலம் கி. பி. 897ஆம் ஆண்டுக்கும் 907ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்துக்குள்ளேயாகும். இந்தக் காலக் கணிப்பு சிறிது முன் பின்னாகவும் இருக்கலாம். இந்த அடிப்படையில் நோக்குங்கால்,சோழ அரசோடு பெரிய தொடர்பு கொண்டிருந்த கம்பர் சோழ அரசு ஒடுங்கிக் கிடந்த ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகத் தோன்றவில்லை. ஆனால், சோழ அரசு சிற்றரசாயிருந்தாலும் அரசு அரசுதானே?—ஏன் அக்காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாது?—என்று சிலர் வினவலாம். மற்ற வரலாற்றுச் சூழ் நிலைகளையும் பார்க்க வேண்டுமே! கம்பருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் இடையே தொடர்புக் கதைகள் பல சொல்லப்படுவதை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. கம்பர் வரலாறு முழுவதையும் கூர்ந்து நோக்குங்கால், அவர், பேரரசுச் சோழர் காலத்தவராகவே தென்படுகிறார்.

ஆனால், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்னும் கொள்கையினர் சிலர், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (கி. பி. 871-907) அரசாண்ட ஆதித்தச் சோழன் காலத்தில் கம்பர் வாழ்ந்தார்; அதனால்