பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதை 143


அப்போ தம்பிகாபதி அருமையாய்ப் பாடுவான்:
"இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய....."

135 என்றுபா டிக்கொண் டிருக்கும் போதே
கம்பர் வயிறு கலங்கலா யிற்று;
அம்பி காபதி அமரா வதிமேல்
காதல் பாடுவதாய்க் கருதிய கம்பர்
சாதல் நேர்வது சால உறுதி

140 எனமிக அஞ்சி, இருந்தசூழ் நிலையை
நனிமிக மாற்ற நாடி துடிக்கையில்,
"கொட்டிக் கிழங்கோ கொட்டிக் கிழங்கு
கொட்டிக் கிழங்கு வாங்க வில்லையோ'"
என்றுபெண் ணொருத்தி இரும்பெருந் தெருவில்

145 சென்று கூவியதைச் செவியில் மடுத்தே
அம்பியின் பாடலை அடுத்துப் பாடுவார்:
................................ "கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோதை வையம் பெறும்."
என்றுவெண் பாவை இனிது முடித்தார்.

150 முழுப்பா டலையும் முற்றும் நோக்கின்,
"இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய - கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோதை வையம் பெறும்."

155 என்றே அமையும்; இதனால், அம்பி
நன்றே பாடினன் நங்கைவே றெருத்தியை
என்னுங் கருத்தங் கினிதுரு வானது.
நாடகம் நடப்பதை நன்கு வேந்தனும்
காடவன் தானும் கவனிக்க லாயினர்.

160 அம்பிகாபதி நோக்கிலும் அமராவதி நோக்கிலும்


152. வட்டில் - பாத்திரம்; மருங்கு- இடுப்பு 154.ஓசை ; வையம்- பூவுலகம்.