பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 அம்பிகாபதி காதல் காப்பியம்


இன்னும் அம்பி இறையவற் கியம்புவான்:
அடுத்த படியென் அன்னையை வைப்போம்;

215 எடுத்துக் கொள்வோம் இனியநும் மகளையே!
பல்வகை உணவையும் பரவிய பலர்க்கும்
நல்வகை யாக நங்கை யொருத்தியே
வட்டில் சுமந்து வழங்குதல் செய்யின்
இட்டடி நோவதும் இடுப்பும் ஒடிவதும்

220 இயற்கையே யதனால் இரங்கிப் பாடலும்
இயற்கையே; இதில்பிழை என்ன உளதென,
'அப்பா? எனவே அரசன் அதிர,
அப்பா வருகெனக் கம்பரை அழைத்தான்;
இப்பால் இருவரும் விடைபெற் றேக,

225 வெப்பால் வதங்கி வேந்துசென் றனனே.
"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது'
எனுங்குறட் கம்பிகாபதி இலக்கியம் ஆவனே.


213. இறையவன் - அரசன். 216. பரவிய - பரவி அமர்ந்திருந்த. 222. அப்பா அப்பாடா, ஐயோ; அதிர - அதிர்ச்சியடைய 223. அப்பா - தந்தையே. 224. இப்பால் - இதன் பிறகு; இருவரும் - கம்பரும் அம்பிகாபதியும் 225. வெப்பால் - (உள்ளக்) கொதிப்பால். 227. இகல் - பகை, எதிர்ப்பு.228. இலக்கியம் - ஏற்ற எடுத்துக்காட்டு.