பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காலமும் கதை மாந்தரும்

13

அவர், ஆதித்தச் சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில், தம் நூலில், இராமனுடைய முன்னேர் சூரிய குலத்தில் வந்தவர்கள் என்பதை அறிவிக்கும் இடத்தில்,

“ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்”

என்று பாடி ஆதித்தன் பெயரைச் சுட்டியுள்ளார் என்று கூறுவர். ஆதித்தன் என்பதற்குச் ‘சூரியன்’ என்ற பொருள் உண்டு. கம்பர் ஆதித்தச் சோழனை நினைவு கூராமல், இயற்கையாக ‘ஆதித்தன்’ என்று கூறியிருக்கக் கூடாதா? அல்லது தம் தந்தையின் பெயராகிய ‘ஆதித்தன்’ என்பதைத் தந்தையின் நினைவாகத் தம் நூலில் பெய்திருக்கக் கூடாதா? எனவே, இது பொருத்தமான சான்று ஆகாது.

மற்றும், இக் கொள்கையினரால், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்பதற்கு அடிப்படைச் சான்றாக எடுத்துக்காட்டப் படுகின்ற,

“எண்ணிய சகாத்தம் எண்ணுற்றேழின்மேல்

சடிையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லுர் தன்னிலே

கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி

அத்த நாளில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்

கேற்றி னுனே”
'

என்னும் ஊர் பேர் தெரியாத (அநாமதேயப்) பாடலுக்கு, சில கம்ப ராமாயண ஓலைச் சுவடிகளின் ஈற்றில் காணப்படுகிற பின்வரும் பாடல் பதில் இறுக்கும். அப் பாடல்:

“ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறொழித்துத் தேவன் திருவெழுந்துார் நன்னாட்டு—மூவலூர்ச்

பால காண்டம்-வரலாற்றுப் படலம்.3ஆம் பா - மர்ரே பதிப்பு.