பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அம்பிகாபதிக்குக் கம்பரின் அறிவுறூஉக் காதை

151

யானோ காதல் யாதும் கொள்ளேன்
வீணாய் என்னை நீ விரும்புதல் தகாதென
எடுத்தியான் மொழியவே, இன்னெரு நாளிவண்

100 அடுத்திடு வேனென் றவனும் ஏகினன்.
என்று கூற, இனைந்தார் கம்பர்.
எள்ளவென் தங்கையோ டிணைய
முயன்ற கிள்ளியின் தலையைக் கிள்ளுவன் யானென
அம்பி சினத்தோ டறைய, கம்பர்,

105 உனக்கிவ் வேளை யிருக்கும் உணர்வவன்
தனக்கும் இருக்குமென் றறிதலே தக்கதாம்
என்று கூற, இயம்புவான் அம்பி;
எந்தையே நந்தம் இறையவ னிடம்போய்,
எந்த வகையேனும், எனக்குப் பெண்தர

110 இசையச் செய்வது ஏற்ற செயலாம்
வசையிலிவ் வழியில் வாழ்வு பெறுவேன்;
முயல்வீ ரென்று மொழிய,வஞ் ஞான்று
அயலே அம்பியின் அன்னை வந்து
கணவரை வேண்டிக் கழற லானாள்:

115 மணவினை முடிக்க மறுப்ப தேனோ?
அரசிளங் குமரன் அரியநம் மகளிடம்
உரைசெய் துளானெனின் உற்றவன் தங்கையை
நம்மகன் மணப்பதும் நடைபெறுஞ் செயலென
என்மனம் எண்ணும்; எழுந்து சென்றுநீர்

120 மன்னன் மகளை மணம்பேசி வருக
என்னவே, கம்பர் எடுத்து மொழிவார்:
கிள்ளிநம் மகள்மேல் கிஞ்சமும் காதல்


99. இவண் - இவ்விடம். 101. இனைந்தார் - வருந்தினர். 103. எள்ள - (பலரும்) இகழும்படி; இணைய - புணர. 108. இறையவன் - மன்னன். 111. வசையிலிவ் - வசைஇல் இவ்வழி - வசை - பழி. 112. அஞ்ஞான்று - அப்போது. 113. அயலே - பக்கத்தில். 117. உணரசெய்துளான் (என்னென்னவோ) பேசிச் சென்றுள்ளான். 122. கிஞ்சமும் - கொஞ்சமும்.