பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

அம்பிகாபதி காதல் காப்பியம்



அரசனவ் வாறே அனைத்தும் செய்தபின், மறைநூல் படியென் மகள்பால் உள்ளது;
அம்பிகா பதிநீ அவளிடம் போந்து
25 எம்பிரர்ன் குறள்படி கொணருமா றேவினன்
என்று கூறி இணையிலா வதனை
நன்றே பெற்று வருகென நவில,
அம்பி காபதி அவ்விடம் பெயர்ந்தான்.
நம்பவே யில்லை நங்கைதன் கண்களை.

30 கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்ததென
எதிர்பாராக் காட்சியால் இருவரும் அணைத்ததால் அம்பியின் ஆரப் பூச்சது அழிந்தது.
திருக்குறள் தரும்படி தெரிவிக்கவேயவள்
ஒருகுறள் தானும் இல்லையென் றுரைக்க,

35 வியந்த அம்பி வேத்தவை சென்ருன்.
நயந்த நண்பர் ஒருவர் நண்ணினர்;
அம்பிகா பதியை ஆரத் தழுவினர்;
சால அழிந்தது சந்தனப் பூச்சு.
மேலும், வேந்தன் மேனிப் பூச்சால்

40 களவினை யறிவது கடினமாயிற்று.
கொளவே சென்றும் குறள்படி யிலையெனக் கூறினள் நும்மகள் என்றவன் கூறினன். அதன்பின் அரசன் அவைநடை பெறுகெனப் பதமாய்ப் பகர்ந்துதன் பாவையை அடைந்தான்.

45 அவளது மார்பின் ஆடை மேலே



22. அனைத்தும் செய்தல் - அம்பிகாபதி உட்படப் புலவர்கட்கு அழைப்பு விடுத்தல், ஒட்டக் கூத்தர் தலைமையில் திருக்குறள் பேரவை கட்டுதல், அனைவர் மார்பிலும் சக்கனக் குழம்பு பூசி வரவேற்றல் ஆகிய அனைத்தும் செய்தல். 23. மறைநூல் படி - தமிழ் மறையாகிய திருக்குறள் பிரதி. 25. எம்பிரான் - எம்தலைவனகிய மன்னன். 35. வேத்தவை - அரச சபை. 38. சால - மிகவும். 41. கொளவே - திருக்குறள் பிரதியைப் பெற்றுக்கொண்டுவர, 43. அவை - சபை. 44. பாவை - அமராவதி.