பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 அம்பிகாபதி காதல் காப்பியம்


பற்றிய மகளைப் பதைக்கத் தள்ளி,
இறைக்க வியலும் எளிதாய் எதையும்

75 பொறுக்கல் அரிதெனப் புகன்று மகட்கு,
பின்வரு மாறு பேதுற் றெண்ணினான்:
புன்செயல் இதனைப் பொறேஎன் சிறிதும்
களவுப் புணர்ச்சியைக் கண்டு பிடித்தேன்
உளவுறு அமைச்சர்க்கும் உரைக்க வேண்டா.

80 உண்மைக் களவை உணர்ந்திடின் காடவன்
தன்மகன் றனக்கும் கட்டத் தயங்குவான்.
அம்பிகா பதியைக் கொன்றபின் அடுத்தே
அமரா வதியை அமைச்சன் மகற்கு
மணமது முடித்து மானம் மீட்கலாம்;

85 இனுஞ்செயற் பால எத்தனை யோவுள
என்றே மன்னன் எண்ணித் தனதகம்
சென்ருெரு குறள்படி சீராய்க் கொணர்ந்தே
அரங்கம் போந்துதன் அரியணை அமர்ந்தான்.
சுரங்கம் அகழ்ந்து சுடர்தரு வைரம்

90 கொணர்வார் போலக் குறளினுட் புக்கவ்
வணுவுள் அமைந்துள ஆர்கலி ஏழையும்
திறந்து விட்டுத் திறலுறு புலவோர்
சிறந்த முறையில் திறனாய்வு செய்வதைக்
கண்டு மன்னன் கரையிலாக் களிப்பு

95 கொண்டவன் போலக் கூர்ந்து கேட்டனன்.
மட்டில் சுவையுறு மாண்பாய் வின்பின்


79. உணவு-தந்திரம். 81 கட்ட-மணமுடிக்க. 85. இனும்-இன்னும். 86. தனது அகம் - தனது அரண்மனேயின் உள்ளிடம், 88.அரங்கம் - சபை. 89. அகழ்ந்து-தோண்டி. 90.புக்கவ்-புக்கு அ-புகுந்து அக்க. 91. அணுவுள் - குறளாகிய அணுவுக்குள்,ஆர்கலி -கடல். 92.திறல் உறு- திறமை மிக்க. 93. திறய்ைவு தரமான கயங்களே எடுத்துக் கூறி ஆய்வு செய்தல்,விமரிசனம் செய்தல்,96மட்டில்-மட்டுஇல்- அளவில்லாத; மாண்பாய்வு - மாண்பு ஆய்வு - சிறந்த ஆராய்ச்சி.