பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23. அம்பிகாபதியைக் கொல்ல அரசன்

சூழ்ந்த காதை

அடுத்தநாள் அரசனும் அமைச்சனும் சூழ்ச்சி
தொடுத்தனர்; மன்னன் துயரொடு கூறுவான்:
அமைச்சரே அம்பிகா பதியைக் கொன்றே
அமரா வதியைதும் அருமகற் கீய
5 எடுத்தனன் முடிவு என்மகள் கற்பு
விடுத்தவள் அல்லள் வீறுடைக் கற்பினள்.
அம்பிகா பதிதான் அவளை யடைய
நம்பி முயல்வதால் நமனுல கேகுவான்;
உமது கருத்தை உரைத்திடு வீரென,
10 உமது கருத்தே ஒப்பிலா ஏழை
அடியவன் கருத்தும் ஆகும்; அன்றியும்,
குடிமக மிையான் கொற்றவன் கருத்தை
மறுத்தல் வல்லனே? மாற்றம் இலையென
இறுத்தனன் விடையும் இழிகுண வமைச்சன்;
15 உள்ளுக் குள்ளே ஒப்பிலா உவகை
கொள்ளும் மனத்தொடு கொற்றவற் பணிந்தான்.
சிவபூ சனையில் கரடி விடல்போல்
கம்பர் வந்து காவலற் ருெழுதார்.
இம்பரிஞ் ஞான்றுநீர் எய்திய காரணம்
20 கூறுமின் என்று கொற்றவன் கடாவ,
மங்கல வினையினை மகிழ்வொடு கூற
இங்கு வந்தனன் இயம்புவன் அதனை:




4. அருமகற்கு ஈய - அருமையான மகனுக்கு மனமுடிக்க. 6. வீறு - பெருமை, பொலிவு. 18. மாற்றம் - மாறுதல். 16. கொற்றவன் . அரசனே. 18. காவலன் -அரசனே. 31. மங்கல வினை - திருமணம் பற்றிய செய்தி.