பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 அம்பிகாபதி காதல் காப்பியம்


ஒன்று விப்பதே யாகுமிஃ துறுதி
என்று கூற, இயம்புவான் வேந்தன்:

55 உமக்குப் பித்தம் தலைக்கேறி யுள்ளதாய்
எமக்குத் தோன்றுமால் என்ன மொழிவது!
அம்பிகா பதியும் அமரா வதியும்
இணையிலாக் காதலர் என்றுபொய் புளுகி
இணையிலா இருவரை இணைக்க முயல்வது

60 கடும்பெருங் குற்றமாம்; கழறுவேன் உமக்கு;
சுடுஞ்சொல் இனியும் சொலாதீர் என்றிட,
செந்தமிழ்ப் புலவர் செப்புவார் அவற்கே:
இந்த மணத்திற் கிசையீ ராயின்
நந்தம் மக்கள் நமனுல கெய்துதல்

65 திண்ணம் என்று தெரிந்தே உமக்கென்
எண்ணந் தன்னை எடுத்துரைத் தேனியான்;
முன்னம் உணர்ந்து முடிப்பீர் திருமணம்
பின்னர் இவணியான் பேசவொன் றிலையென,

              

(அரசன்)



எண்ணி யுரைப்பேன்; இனிநீர் நந்தம்
விருந்தினர் விடுதியில் தங்கி யிருப்பின்,
பொருந்த ஆய்ந்து பொருத்தம் பார்த்துத்
தெரிந்தபின் உம்மைத் தேடி யழைத்து
முடிவு கூறுவல் முனியாது சென்மெனக்
காவலன் உரைப்ப, கம்பர் சென்றபின்,

75 அரண்மனை ஆசான் ஒட்டக் கூத்தர்
வரவழைக்கப் பெற்றார் வாழ்த்தி யமர்ந்தார்.
அரசன் எழுந்தே ஆசாற் றொழுது
உரைசெயலானான்: உம்மையிங் கழைத்த
நோக்கங் கூறுவல் நுண்ணிதின் கேண்மின்.



87.முன்னம் - முன்னதாக. 73. முனியாது - சினக்காது: சென்ம்என - செல்லுவீர் என்று. 77. ஆசாற்ருெழுது - ஆசானைத் தொழுது.