பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 அம்பிகாபதி காதல் காப்பியம்


(குப்பையா)

(2) கண்டுதான் இனிக்குங் கண்டாய்,
        காடிதான் புளிங்குங் கண்டாய்,
சுண்டைதான் கசக்குங் கண்டாய்,
        சுண்ணாம் புவேகுங் கண்டாய்,
குண்டுதான் உருளுங் கண்டாய்,
        குடைமழை தடுக்குங் கண்டாய்,
25 வண்டுதேன் குடிக்குங் கண்டாய்,
        வாடைதான் நடுக்குங் கண்டாய்."
அம்பி காபதி அவனைப் பார்த்துப்
பலேபலே உண்மை! பாடெனப் பாடுவான்:

(குப்பையா)



(3) "பாட்டியுங் கிழவி யாவாள், பாப்பா குமரி யாவாள்,
பாட்டனும் கிழவ னாவான், பையனும் குமர னாவான்,
30 சேட்டனும் அண்ண னாவான், சிறுவனும் தம்பியாவான்,
நாட்டுளோர் இவற்றில் தப்பு நவிலவே முடியாதன்றோ?"
என்று பாடவே, இயம்புவான் அம்பி;
நன்று நன்று நயமிகு பாக்கள்;
குப்பையா ஒன்று கூறுவன் கேளாய்

35 தப்பாது பாடு வாயோ தருவதை?
'குப்பன்' என்பதை முதற்சொலாக் கொண்டும்
'குடித்திட்டான்' என்பதை ஈருக் கொண்டும்
வடித்திடு ஒருபா வளமாய் என்ன,
அன்னவன் அதனை அங்ஙனே ஏற்றே

40 எண்ணிச் சிறுபோழ் தியற்றிப் பாடுவான்:


22. கண்டு - கற்கண்டு. 25. வாடை - வாடைக்காற்று. 30. சேட்டன் - மூத்த பிள்ளை. 38. வடித்திடு - தேர்ந்து பாடு.