பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 அம்பிகாபதி காதல் காப்பியம்


மலரும் என்னுளம் மகிழ்ச்சிப் பெருக்கால்.

65 அகப்பொருள் சுவைநனி அமைந்த ஒருபா
உகப்புற இயற்றி உதவுகென வேண்ட,
ஓலை யொன்றில் அம்பி எழுதுங்
காலை, குப்பையா கருத்தொடு தடுத்தே,
இந்த ஓலையில் எழுதாது யான்கொடு

70 வந்தவிவ் வோலையில் வரைவீர் என்று
அணியுறு ஓலை நறுக்கொன் றளித்தான். அதிலே
இனிய அகப்பொருள் பாவொன் றியற்றிக்
கனிவுடன் அம்பி கையில் கொடுக்க,
அம்பொருள் அமைந்த அகப்பா நோக்கி,

75 கம்பர் வீட்டுக் கட்டுத்தறி தந்த
காதல் கவிநனி நன்றெனக் கழறிப்
போதல் செய்தனன் பொய்ம்மைப் புலவன்.
பொய்யாம் புலவனை உண்மைப் புலவனென்
றையோ உரைத்தற் கரிய உவமை

80 ஓரா துலக வழக்கின் மரபிலே
காராடு வெள்ளாடெனக் கழறப் படுதலே.


66.உகப்பு - மகிழ்வு- 69-70. கொடு வந்த - கொண்டுவந்த 71. ஓலைநறுக்கு - அழகாக நறுக்கிய ஓலை. 81. காராடு -கறுப்பு