பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 அம்பிகாபதி காதல் காப்பியம்


நன்மணம் புரிய நப்பாசை கொண்டே
25 அமரா வதியை அடைந்து நீவிர்
மூக்குடை பட்ட முழுக்கதை அறிவேன்
நாக்கில் நரம்பிலாது கண்டது நவில்வதோ?
போக்குவே றில்லெனின் போவீர் நும்மனை
நாய்நிகர் உமக்கிம் மாநிழல் நன்றிலை;

30 போய்விடும் இவண்வீண் பொழுதுபோக் காதீர்
என்றிட, சிம்மன் இயம்புவான் சினந்து:
வென்றிட என்னை விரும்புகின் றாயோ?
விட்டுக் கெண்டையை விரால்பிடித் தாற்போல்
ஒட்டுற வுவிடுத் துமக்கே லாத
35 மன்னன் மகளை மணக்க விரும்ப
என்ன கொழுப்புனக் கென்பதை யறியேன்.
"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து" எனுங் குறளைப்
பின்பற் றுதியோ பேதாய் உனக்குத்

40 துன்பந் தருமவள் தோதிலை உணர்கென,

(அம்பிகாபதி)



"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது" எனுங் குறளை
அகத்துள் கொண்டே ஆற்றுதி யோசெயல்?
மகத்துள் புக்க சனியென வந்தாய்

45 அகத்தைத் திருத்தென அம்பி கடி

ய,


33. கெண்டை - கெண்டைமீன்; விரால் - விரால்மீன்; கெண்டை மீனினும் விரால்மீன் சிறந்ததாகச் சொல்லப்படும். 37. உள்ளுவது- எண்ணுவது; உள்ளல் - எண்ணுக. 38. தள்ளினும் - தவறினும். 39. பேதாய் - அறிவிலியே. 41. அம்பினில் - அம்பைக் காட்டிலும். 44. மகத்துள் புக்க சனி - மகநட்சத்திரத்துக்கு உரிய வீடாகிய சிம்மத்துக்குள் சனி பெயர்ந்து வந்து புகின் கெடுதியாம். 45. அகத்தை - மனத்தை.