பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதியும் சிம்மனும் அமர்புரிந்த காதை

169

(சிம்மன்)

கொற்றவன் உன்னைக் கொல்வ துறுதி மற்றது வரையும் வாழ விடுவதேன்? தும்பை விட்டுக் கொம்பைப் பிடிப்பதோ? கொற்றவன் உன்னைக் கொல்லு முன்பே

50. நற்றவர் உலகுக்கு நானே அனுப்புவேன் என்ற சிம்மன் எடுத்தான் கத்தியை, அம்பியின் அகலமே குறியா யாக்கி வெம்புஞ் சினத்தொடு வீசின்ை அதனை. அம்பிதன் ஒலைக் கட்டால் அதனைத்

55 தடுத்து வீழ்த்தித் தானதை ஒல்லே எடுத்துச் சிம்மன் எதிர்த்து வருமுன் பக்கலில் உள்ள பாழ்ங்கிணற் றுக்குள் புக்கிட எறிந்தான், போக்குவே றிலாத சிம்மன் வந்து செந்தமிழ்ப் புலவனை

60 விம்மத் தூக்கிக் கிணற்றில் வீசியோர் பாறையைப் போட்டுப் பதமாய்க் கொல்ல வீருெடு முயலுமுன், அம்பி வெளியே ஏறி வந்து சிம்மனை எடுத்தே பாழ்ங்கிண றதனில் பதற எறிந்தான்.

65 வீழ்ந்தவன் கிணற்றில் வெறுந்தண் ணிரும் இலாமையால் வல்லே ஏறிவந் திட்டான்; வெலாமல் நின்னையான் வீடு திரும்பேன்; தானத் தலைவனைத் தமிழ்மொழிப் புலவனி ஏனையோர் போல எண்ணி வெல்ல

70 முயல்வது முற்றும் முட்டாள் தனமாம். படையின் தலைவனைப் பகைத்துக் கொண்டு


48. தும்பு - க்யிறு. 50. கற்றவர் உலகு - மோட்சம். 52. அசலம் - மார்பு. 55. ஒல்லே - விரைவில். 63. வீருெடு - வேகத்தோடு. 66. வல்லே - விரைவில். 67. வெலாமல் - வெல்லாமல். 68. த இன - சேனே.