பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதியும் சிம்மனும் அமர்புரிந்த காதை

171

95 எனமாறி மாறி இருவரும் வினவினர்.
சிம்மனைப் போலவே செந்நாப் புலவனும் இம்மியும் குறைந்திலன் இரும்பெரு மல்லில்; இளமை யிலேயே இப்போர்ப் பயிற்சியை வளமாய்ப் பெற்றவன் வல்லமை யுற்றவன்;

100 வல்லே எண்ணி வல்லே முடிக்கும்
நல்ல செயற்றிறன் நண்ணப் பெற்றவன்;
தன்னம் பிக்கையொடு தகவாய்த் துணிவும் மன்னப் பெற்றவன்; மற்போர்க் குரிய
இன்னபிற தகுதிகள் எல்லாம் உடையவன்.

105 இவனைச் சிம்மன் தூக்கி எறிய,
அவனை அம்பியும் அங்ங்னே செய்தான்;
ஒருவரை யொருவர் உயரே தூக்கி எறிவதும் வீழ்வதும் எழுவது மாயினர்;
அடிபல போட்டு வீடு கட்டிப்

110 பிடிபல போட்டுப் பெரும்போர் புரிந்தனர்; குத்துவர் இடறுவர் குப்புறக் கீழே
பொத்தென வீழ்வர்; பொருக்கென எழுந்து
கட்டிப் புரள்வர்; கைகால் முறுக்குவர்.
ஒருகால் அம்பி ஒழிவதுபோல் தோன்றும்

115 மறுகால் சிம்மன் மாள்வதுபோல் தெரியும்.


சந்தன் என்பவனே மற்போரில் வீமன் வென்ருன்; கம்சன் அனுப்பிய மல்லரைக் கண்ணன் (கிருஷ்ணன்) வென்றான்; வாணன் என்னும் அரக்கனை (வாணுசுரனே) மற்போரில் கண்ணன் வென்ருன்; பண்டு: தமிழ்நாட்டில், சோழன் போர்வைக்கோப் பெருகற்கிள்ளி என்னும் மன்னன், முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனே மம்போரில் வென்று. கொன்ருன் என்பது புறநானூற்று வரலாறு.

96. செங்காப் புலவன் - அம்பிகாபதி. 100. வல்லே-விரைந்து. 101. செயற்றிறன் - செயல் திறன். 106. அங்கனே - அவ்வாறே. 112. பொருக்கென - (விரைவுக் குறிப்பு) விரைவாக. 114. ஒரு கால் - ஒருமுறை. 115. மறுகால்-மறுமுறை.