பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

அம்பிகாபதி காதல் காப்பியம்


வெற்றி யார்க்கென விளம்பொன வகையில் வெற்றித் திருமகள் விடுவிடென மாறுவாள். அக்கம் பக்கம் ஆடுமாடு மேய்ப்பவர்,
ஒக்க வயலில் உழுதொழில் புரிபவர்

120 அனைவரும் வந்தவண் அமர்புரி கடும்போர்
முனைதனைச் சுற்றி மொய்த்துக் கொண்டனர்; சிம்மன் அம்பியைச் செறிக்க முயலின்
ஐயோ ஐயோவென் றலறுவர் அனைவரும்; அம்பிசிம் மனைக்கீழ் அடிக்குங் காலை

125 நம்பி வெல்க நம்பி வாழ்கென
வளமாய் அம்பியை வாழ்த்துவர் அனைவரும்; உளமதில் அச்சமும் உவகையும் மாறிடும். இறுதியில் சிம்மனை ஏந்தல் வீழ்த்தி
உறுதியாய் மார்பில் ஒருகால் ஊன்றிமற்

130 ருெருகா லாலவன் கைகளை உதறித்
தன்கை களாலவன் தலையையும் காலையும் வன்மையாய் இறுக்கி வளைத்து முதுகை
முறிக்க முயல்கையில் முன்னுளோர் பலரும் குறுக்கே வந்து கும்பிட்டுத் தடுத்திட,

135 அம்பி தூக்கிக் குப்புற ஆழ்த்த
சிம்மனின் இரண்டு தோள்களும் சேர
மண்ணிலே பதியவாய் மண்ணைக் கவ்வ,
நினது வெற்றி நிலைத்து விட்டது
எனது தோல்வியை ஏற்கிறேன் யானெனக்

140 சிம்மன் பணிய, செற்றம் நீங்கி


117. விடுவிடென - (விரைவுக் குறிப்பு) விரைந்து விரைந்து. 119. ஒக்க - ஒருமிக்க. 130. அவண் - அவ்விடம். 123. செறிக்கஅழிக்க, கொல்ல. 135. கம்பி - அம்பிகாபதி. 128. இறுதியின் - முடிவில்; ஏந்தல் - அம்பிகாபதி. 188. முன்னுளோர் . முன்னே உள்ள பார்வையாளர்கள். 140. செற்றம் - சினம்.