பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதி கடவுள் பாடல் பாடிய காதை

175



இனிமைப் பண்ணுே டிசைக்கத் தொடங்கினன். வேந்தன் தடுத்து விளம்ப லானான்
மாந்த இசையை மறுக்க வில்லை;

25 இனிய நூறுபா எழுதி முதலில்
கனிவொடு என்னிடம் காட்டிடல் வேண்டும்; மற்றதன் பின்னரே மாணவை கேட்டுச்
சொற்றிறம் பொருளொடு சுவைக்கப் பாடலாம் என்றே இயம்ப, இனிதென அம்பி

30 நன்றே ஒலே நறுக்குகள் எடுத்தே
இறைமீ திணியபா எழுத லானான்
மன்னன் அதையும் மறுத்து நிறுத்தி
இன்ன ஓலையில் எழுத வேண்டா;
என்னிடமவ் வோலைகள் ஈகெனப் பெற்றபின்

35 நன்னரிவ் வோலையில் நலமுற எழுதெனத் தன்னிட மிருந்த தால வோலையை
முன்னுற நீட்டி முறைப்போ டளித்தான்.
வாங்கி அம்பி வளவிய கருத்தொடு
பாங்குற ஒவ்வொரு பாடலாய் எழுதி

40 ஈந்துகொண் டிருந்தான் இறையவன் தன்னிடம். போந்த புலவர்கள் பூரித்து மகிழ்ந்தனர்.
முற்பகல் காப்பும் ஐம்பதும் முடித்தபின்
பிற்பகல் ஐம்பது பீடுற முடித்துநூல்
கொடுத்தபின் அவையில் கொற்றவன் கூறுவான்:

45 இன்றுநூற் ருெருபா எழுதிக் களைத்ததால் சென்று நாளை சிறப்பொடு வந்து
ஈங்குளோர் கேட்க இசைப்பாய் என்ன,
ஆங்கவ் வாறே அம்பி மறுநாள்


24. மாந்த - நுகர. 27. மணவை - சிறந்த சபை. 28. சொறி அறிறம் - சொல்திறம். 81. இறை - தெய்வம். 38. இன்ன - (உன் னிடம் உள்ள) இந்த 86. தால ஒல - பனையோலே. 42. காப்பு - காப்புப் பாட்டு, ஐம்பது - முதல் ஐம்பது பாடல்கள். 48. ஆள் கவ்வாறே - ஆங்குக் கூறப்பட்ட அவ்விதமே.