பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

அம்பிகாபதி காதல் காப்பியம்


50 ஓங்குறும் பேரவைக் குவப்பொடு வந்தான் நூற்ருெரு பாக்கள் அடங்கிய நூலினை
ஏற்ற மன்னன் எடுத்துக் கொடுத்தான். இருகையால் அம்பி இறைஞ்சி வாங்கி
உருகப் பாடினன் ஒவ்வொன் றாக;
காப்பும் தொண்ணுரற் ருென்பது கவிகளும்

55 மாப்புக ழோடு பாடி மற்ருேர்
ஈற்றுப் பாடலை இசைக்கத் தொடங்கினான்; வேற்றுப் பாடல் விரவக் கண்டான்.
"சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்" என்றப் பாடலின் முதலடி யிருந்தது.

60 இந்தவீற் றுப்பா இவணியான் எழுதித்
தந்த தன்று; தவருய் இதிலே
சேர்த்துவைத் துள்ளனர் சிறிதும் ஒவ்வேன். சீர்த்தியோ டென்பா செப்புவன் கேண்மின்: "இம்மையில் ஒருதாய் ஈன்றவோர் மகவையும்
புரத்தல் எளிதிலை;

65 மும்மை யுலகையும் முகிழ்வித் தோம்பும்
முழுமுதல் தேவிநீ!
அம்மையே! உன்றன் அருள்முழு தியம்பும்
ஆற்றல் இல்லேன்;
வெம்மைச் சாவினை விலக்கிக் காக்கென
வேண்டு வேனே."

79என்பதிந் நூலின் இறுதிப் பா ; சிற்
றின்பம் விரவா திருச்குமிப் பாடலை
மன்பதைப் புலவோர் மறுக்க வொண்ணுமோ என்பதாயம்பி இயம்பி மறுத்தான்.
மன்னவன் அவனை அறவே மறுத்தே


52. இறைஞ்சி - கொழுது. 57. விரவ - கலந்திருக்க. 60. இவண் - இவ்விடம். 3ே. சீர்த்தி புகழ். 64. இம்மை - இவ் ஆலகம், இப்பிறப்பு: புரத்தல் - காத்தல். 65. மும்மை - மூன்று; முகிழ்வித்து - தோற்றுவித்து. 67. வெம்மை - கொடுமை.