பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அம்பிகாபதி காதல் காப்பியம்

சிம்மன்—காடவனின் மகன், படைத் தலைவருள் ஒருவன். தாரகை—காடவன் மகள், அமராவதியின் தோழி. ஒட்டக்கூத்தர்—சோழனின் அவைக்களப் புலவர்—ஆசான். குப்பையா—ஒரு வஞ்சகப் புலவன். மற்றும் பலர்.

மேலே குறிப்பிட்டுள்ள கதை மாந்தர் பெயர்களுள், கிள்ளி, கற்பகத் தாச்சி, கணனார், காடவன், கமலி, சிம்மன், தாரகை, குப்பையா ஆகியவை கற்பனைப் பெயர்களாம். காப்பியத்தில், அம்பிகாபதி என்னும் பெயர் ‘அம்பி’ எனவும், அமராவதி என்னும் பெயர் ‘அமரு’ எனவும், சில இடங்களில் யாப்பு அமைதிக்காகச் சுருங்கத் தரப்பட்டிருக்கும்.

(குறிப்பு : கம்பனின் காலக் கணிப்பு பற்றிய கருத்து வேற்றுமைக்காக ஒருவர்க் கொருவர் கசப்படையலாகாது.)