பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

180

அம்பிகாபதி காதல் காப்பியம்


அன்னையின் மிகுபுகழ் அறிவித் திறுதியில்,
உலகில் ஒருதாய் ஒருமக வினையே
இலகிட வளர்க்க இயலா நிலையில்
மும்மை யுலகையும் முன்னின்று காக்கும்
155 அம்மை யின் புகழ் அனைத்தும் என்னால்
செம்மையாய்ச் செப்ப வொல்லா தென்பதும்
கொற்றவன் என்னைக் கொல்லுவ தாகத்
தெற்றென விளங்கத் தெரிவித் திருப்பதால்
வெம்மைச் சாவினை விலக்கி யருள்கென
160 அம்மையை வேண்டி யிருப்பதும் அமைய
நூறாம் பாடலை நுண்ணிதின் இயற்றினேன்.
ஈறாம் அதனையின் னொருமுறை இசைப்பேன்.
"இம்மையில் ஒருதாய் ஈன்றவோர் மகவையும்
புரத்தல் எளிதிலை
மும்மை யுலகையும் முகிழ்வித் தோம்பும்
முழுமுதல் தேவி c !
165 அம்மையே உன்றன் அருள்முழு தியம்பும்.
ஆற்றல் இல்லேன்
வெம்மைச் சாவினை விலக்கிக் காக்கென
வேண்டு வேனே".
என்னுமிப் பாடலில் ஈங்குள சூழ்நிலை
துன்னி யிருப்பது தோன்றக் காணலாம்;
இன்னுமோர் குறிப்பும் இயம்ப உள்ளது!
170 தொண்ணூற் றொன்பது தூயபாக் களொடு
நூறாம் பாவிற்கும் வரிசையெண்
மாரு தமைக்க மறக்க வில்லையான்.
'சற்றே பருத்த தனமே' எனும்பா
உற்றவிவ் வோலையில் நூறெனும் எண்ணுரு.
175 இல்லை யென்பதை இயம்பக் கடவன்;'


153. இலகிட -விளக்கமுற. 158, தெற்றென - தெளிவாக. 182. ஈறாம் அதனை - கடைசிப் பாட்டாகிய அதனை. 169. துன்னி - பொருந்தி.174. எண்ணுரு - எண்வடிவம்.