பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



27. அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதை

சிறைதனில் அடைபட்ட செந்தமிழ்ப் புலவன்
சிறையினை யிழந்த சிறுபுள் ளானான்;
அடிமை யென்பதன் அடாத பொருளும்
உரிமை யென்பதன் உயரிய விலையும்

5 பட்டறிந் துணர்ந்தான்; பறவையைக் கூண்டுள்
விட்டடைப் போரை வெறுக்க லானன்;
படிமிசை யுள்ள பல்வகை உயிர்களின்
அடிமைத் தளையும் அகல வேண்டுமிக்
கொடுமைக் கிடமே கொடுத்தலா காதெனும்

10 விடுதலை யுணர்வால் வீறொடு பொருதுயிர்
விடுதலைச் செய்த வெற்றி மறவரின்
அடிதமைத் தன்னுடை அகத்தே தொழுதான்;
தன்னலத் திற்காத் தரையில் உள்ள
பன்னலம் ஈயும் பல்வகை விலங்கினைப்

15 பழக்கி வருத்திப் பயன்படுத் திக்கொளும்
சழக்கரைச் சொற்களால் சாடினான் கடிந்து.
மக்களை மக்களே மாடுபோல் வருத்திக்
கக்கக் குருதி கடுமையாய் நடத்தும்
ஆண்டான் அடிமை என்னும் அடாமுறை

20 வேண்டா வென்று வெறுக்க லானான் ;
சிறையினில் புக்குச் செல்லல் உற்றதன்


2. சிறைதனை - இறக்கையினை; சிறு புள் - சிறிய பறவை. 5. பட்டறிந்து - அனுபவித்து. 7. படி - பூவுலகு. 8. தளை - விலங்கு. 10. பொருது - போரிட்டு. 11. விடுதலைச் செய்த - விட்ட, 13. தரை - பூவுலகு. 14. பன்னலம் - பலநன்மைகள். 16. சழக்கர் - கீழ் மக்கள். 18. குருதி - இரத்தம். 21. செல்லல் - துன்பம்.