பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 அம்பிகாபதி காதல் காப்பியம்

இங்குறேன் அண்ணா! இனியவவ் வுலகுக்
குன்னெடு யானும் உறுவே னென்று
பன்னிப் பலப்பல கைகளைப் பற்றிக்

80 கண்ணில் ஒத்திக் கொண்டு கரைந்தாள்.
அம்பி காபதி அழுகையை நிறுத்தி
அவர்தமக் காறுதல் அறைய லானன்:
வெந்துளம் நொந்து வீரிட் டழுஉம்
தந்தையே தாயே தங்கையே அழாஅதீர்.

85 கோடி யாண்டாய்க் கூடினே மல்லோம்;
கூடிநாம் நால்வரும் குலவிய காலம்
அண்மையில் ஒரு சில ஆண்டுகளேயாம்.
உண்மையில் வாணாள் ஒருசிறி தேயாம்.
நூறாண்டு முன்னைய இடமெது நுதலுமின்

90 நூறாண்டு பின்னைய இடமெது நுவலுமின்;
இடையில் கூடிளனோம் இடையில் பிரிகிறோம்
நடைமுறை யேயிது நமக்காப் புதிதிலை.
உயிரழி வதில்லை உடம்பே யழியும்
உயிரது பிரிதல் என்பதே உண்மை.

95 உயிரிலா உடம்பை ஒருவரும் விரும்பார்.
உறக்கம் என்பது உயிரிலாமை போன்றதே.
உறக்கம் சிறிய இறப்பென உரைக்கலாம்.
உறக்கமே உண்மையில் சிற்றின்ப மாகும்;
இறப்பே நனிபேரின்ப மாகும்.

100 பிறப்ப துண்டேல் இறப்பும் உண்டு;
பிறப்பெடுத் ததுமே இறப்புந் தொடங்கும்.
பிறப்பும் இறப்பும் ஒருநா ணயத்தின்
இருபக் கங்கள் போன்றவை எனலாம்.
அன்னையும் தங்கையும் அறியா திருக்கலாம்;

105 அப்பா அறியாத வல்ல இவையெலாம்;


80. கரைந்தாள் - அழுதாள். 83. வீரிடல் - அழும் ஒலிக் குறிப்பு. 89. நுதலுமின் - கருதிப் பாருங்கள். 90. நுவலுமின் - சொல்லுங்கள்.