பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28. கடவுள் வழிபாட்டுக் காதை

அம்பிகா பதியைத் தூக்கிலிட் டழிக்க
இன்னும் இருநாள் இருக்கும் நிலையில்,
கடவுள் பூசனை கனிவொடு புரிந்து
விடவேண்டு மம்பியை வெஞ்சிறையி னின்றென

5 வேந்தனைக் கண்டு வேண்டும் நோக்கொடு
தீந்தமிழ்க் கம்பர் திட்டந் தீட்டி
மலர்வழி பாடு மாண்புறத் தொடங்கினார்;
மலர்நூற் றெட்டு மணத்தொடு கொணர்ந்தார்;
நூற்றெட்டுக் கடவுட் டிருப்பெயர் நுவன்று

10 நூற்றெட்டு மலர்தமை நோன்புகொள் உளத்தொடு
ஈசன் மேனியில் இட்டுப் பெரிய
பூசனை யன்பொடு புரிய லானார்:

(நூற்றெட்டுத் திருப்பெயர்கள்)



உலகம் யாவையும் உளவாக்கினோய் போற்றி
உலகம் யாவும் நிலை நிறுத்துவோய் போற்றி

15 ஆதி பகவனாம் ஐயா போற்றி
வாலறி வுடைய வள்ளால் போற்றி
மலர்மிசை ஏகிய மாண்பினோய் போற்றி
வேண்டுதல் வேண்டாமை யிலாதோய் போற்றி
இருவினை சேரா இறைவா போற்றி

20 பொறிவாயில் ஐந்தவித்த புலவனே போற்றி
தனக்குவமை யில்லாத் தண்ணியோய் போற்றி
அறவாழி அந்தண அண்ணலே போற்றி



3. பூசனை - வழிபாடு. 7. மலர் வழிபாடு - அர்ச்சனை. 9. நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் - கடவுளின் நூற்றெட்டுத் திருப்பெயர்கள்: நுவன்று - சொல்லி. 10. வால் அறிவு - தூய அறிவு.