பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் வழிபாட்டுக் காதை 193


சொற்பதங் கடந்த தொல்லோய் வணக்கம்
அணுவினுள் அணுவாய் அமைந்தோய் வணக்கம்
இயம்பரும் பெருமை இயைந்தோய் வணக்கம்
அரியதில் அரிய அருமையோய் வணக்கம்

55 மருவியெப் பொருளும் வளர்ப்போய் வணக்கம்
நூலுணர் வுணரா நுண்ணியோய் வணக்கம்
மேலொடு கீழாய் விரிந்தோய் வணக்கம்
தோற்றமும் முடிவும் இல்லோய் வணக்கம்
அச்சந் தவிர்க்கும் அருளோய் வணக்கம்

60 தொல்லைத் துன்பம் துடைப்போய் வணக்கம்
எய்ப்பினில் வைப்பாய் இருப்போய் வணக்கம்
பூவில் மணம்போல் பொலிவோய் வணக்கம்
விறகில் தீபோல் விளங்குவோய் வணக்கம்
பாலில் நெய்போல் படுவோய் வணக்கம்

65 ஒப்பிலா மணிபோல் உயர்ந்தோய் வணக்கம்.
மணியில் ஒளியாய் மன்னியோய் வணக்கம்
மாசில் வீணைநேர் மாண்பினோய் வணக்கம்
மாலை மதிய மானோய் வணக்கம்
வீசு தென்றலாய் விளங்குவோய் வணக்கம்

70 வீங்கிள வேனிலாய் விளைந்தோய் வணக்கம்
வண்டறை பொய்கையாய் வயங்குவோய் வணக்கம்
அம்மை யப்பனாய் அமைந்தோய் போற்றி
அன்பில் விளைந்த அமிழ்தே போற்றி
என்பெலாம் உருக்கும் இன்பமே போற்றி

75 வானாகி நின்ற வலிமையோய் போற்றி
காலா யிருக்குங் கடவுளே போற்றி
நெருப்பா யுள்ள நெடியோய் போற்றி


61. எய்ப்பினில் வைப்பு - இளைத்த ஏழமையில் கிடைத்த புதையல். 64. படுவோய் - தோன்றுவோய் 65.மணி - ஒன்பான் மணிகள், இரத்தினங்கள். 71. வண்டு அறை - வண்டு ஒலிக்கின்ற 74. என்பு - எலும்பு. 76. கால்- காற்று

அ - 13