பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் வழிபாட்டுக் காதை 197


சத்தியின்றிச் சிவனொன்றும் சாதிக்க முடியுமோடீ.
சத்தியவள் அருள்செய்து சால்புடனே வண்ணத்தமிழ்ப்
பித்துறுவம் பிகாபதியின் பீடுயிரைக் காத்திடுக!"

(சிவன் மீது பாடல்)



155(4)"மதுரையிலே சிவபெருமான் மன்னுதமிழ்ப்
        புலவரொடு மன்னி நீடு
மதுரத்தமிழ் ஆய்ந்திட்ட மாண்பினை நீ
        அறிவையோடீ மானே நன்கு!
புலவருடன் ஆய்ந்தவர் புலவர் மணி
        கீரனாரைப் பொறாஅது கொடுமை
நிலவுநெற்றிக் கண்ணினால் நெரித்திட்ட
        தேனடிசொல் நீலி அதனை!
நெரித் திடினும் கீரனாரை, நீடுதமிழ்ப்
        புலவராய நீள்புகழ் பெற்ற
160 அரியவிடைக் காடர்பின் அகன்றதை நீ
        அறியாயோ அறைவாய் தோழீ!
தமிழ்வல்லிடைக் காடர்பின் தணந்து சென்ற
        எம்பெருமான் தண்மை மேய
தமிழ்வல்லம் பிகாபதிமேல் தண்ணருள்செய்
        துயிர்மீட்டுத் தருக நமக்கே".

(5) "மறைக்காட்டில் கதவு மூட மறைஞான
        சம்பந்தர் மாண்பு சான்ற
மறைத்தமிழ்பா டியவுடனே மன்னுசிவன்
        மூடிட்டார் மாதே கதவை.
165 சொல்வேந்தர் திறக்கும்படி சொல்லிப்பா
        பலபாடியும் சுருக்க அருளி


155. நீடு - நீண்ட காலம். 157, கீரனாரை - நக்கீரரை; பொறாஅது - பொறுக்காமல். 100. அரிய இடைக்காடர்; இடைக்காடர் ஒரு புலவர். 161. தணந்து சென்ற - பிரிந்து சென்ற: மேய - பொருந்திய; பாண்டியன் புறக்கணித்ததால் வெளியேறிய இடைக்காடருடன் சிவனும் சென்றாராம். 164. மறைத் தமிழ் - வேதமாம் தமிழ், தேவாரம். 165. சொல்வேந்தர் - திருநாவுக்கரசர்; சுருக்க ; விரைந்து.