பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அம்பிகாபதி காதல் காப்பியம்

அம்பிகா பதிவர லாற்றினை ஆய்ந்தே,
நாடு நகரின் நலங்கூறு காதையும்
காதலர் காட்சிக் காதையும் அரசன்

20 அம்பிகா பதியை அழைத்த காதையும்
கம்பர் மகனைக் கடிந்த காதையும்
அமைச்சர் மகனின் சூழ்ச்சிக் காதையும்
தாரகை அமராவதி யொடுசூழ்ந்த காதையும்
அம்பிகா பதிக்கு மடல்வந்த காதையும்

25 அமைச்சர் குடும்பொடு சூழ்ந்த காதையும்
காதலர் உரையாடு காதை தானும்
அமைச்சன் அரசனொடு சூழ்ந்த காதையும்
அரசனும் அமைச்சனும் ஆய்வுசெய்த காதையும்
அரசன் அமைச்சனை அழைத்த காதையும்

30 காதலர் பாராட்டுக் காதையும் அமராவதி
பெற்றோ ரோடள வளாவிய காதையும்
கம்பரும் நண்பரும் உலாப்போந்த காதையும்
காதலர் களிப்புறூஉம் காதையும் அம்பிகா
பதிக்குக் கண்ணனார் அறிவுறுத்திய காதையும்

35 காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதையும்
வேந்தன் ஊரலர் உணர்ந்த காதையும்
வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதையும்
அம்பிகா பதிக்குக் கம்பரின் அறிவுறுஉக்
காதையும் ஆரப் பூச்சால் அரசன்

40 ஆய்வு செய்த காதையும் அம்பிகா
பதியைக் கொல்ல அரசன் சூழ்ந்த
காதையும் கட்டுத் தறிகவி பாடித்
தந்த காதையும் அம்பிகா பதியும்
சிம்மனும் அமர்புரிந்த காதையும் அம்பிகாபதி

45 கடவுட் பாடல் பாடிய காதையும்
அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதையும்


25. குடும்பொடு - குடும்பத்தாருடன். 31. அளவளாவிய - கலந்து மகிழ்ந்து பேசிய.