பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204 அம்பிகாபதி காதல் காப்பியம்


50 எனதுயி ரினையும் இட்டுச் சென்றிடு;
என்றெலாம் புலம்பி இனிய அன்னை
தன்னுடல் முழுதும் தனயன் உடல்மேல்
இன்னா தெறிந்தே இழந்தனள் நினைவு.

(கம்பரின் கலக்கம்)



கண்டிக் காட்சியைக் கம்பர் கலக்கங்
55 கொண்டு குழறிக் கூறுவார் பற்பல:
நல்ல காரியஞ் செய்தனை நம்பீ!
பொல்லா உலகில் போதும் வாழ்வென
நில்லா திங்கே நீயகன் றனையோ?

"தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்
60 இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி"யெனும் நாலடிச்

செம்பா உண்மையைச் சிறக்க ஆய
அம்பிகா பதியே அருந்தமிழ்ப் புலவனே
65 உம்பர் உலகுக் கேகியுள் ளாயோ? அல்லது,
இம்பர் மட்டில் இன்றமிழ் பரப்புதல்
போதா தென்று புலவர் உலக


52. தனயன் மகன். 53. இன்னாது - துன்புற்று. 55. குழறி - குளறி, குழம்பி. 56. நம்பீ - அம்பிகாபதியே.59.தவல் அரும் - குற்றம் இல்லாத 60 இதல் - பரை; எஃகு- புலமை வன்மை; குழீஇ-கூடி. 61. நகலின் - மகிழ்வதைக் காட்டிலும். 62.உம்பர் உறைவார் பதி - தேவர் உலகம்; நாலடி - நாலடியார் என்னும் நூல். இந்த நாலடியார்ப் பாடலின் கருத்தாவது: உயர்ந்த புலவர்கள் பலர் கூடித் தமிழ் ஆராய்ந்து பெறும் மகிழ்ச்சியைக் காட்டிலும் சிறந்த மகிழ்ச்சி தேவர் உலகத்தில் கிடைக்குமாயின் அங்குச் செல்லலாம்; அங்கே கிடைப்பது அரிது. 63. செம்பா- செம்மையான நாலடியார்ப் பாடல்.66.இம்பர் மட்டில் - இவ்வுலகில் மட்டும். 67. புலவர் உலகம் - தேவர் உலகம்.