பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனைவரும் ஆற்றாது அரற்றிய காதை 207

முதுக்குறை வுடைய முன்னணிப் பாவல!
முதுமையை வென்று முன்னே சென்றனை.
120 செம்பொருள் செறிதமிழ்ச் சீர்நலம் நுகர
உம்பர் உலகினர் உனையழைத் தனரோ!
வளருந் தமிழை வளர்க்க நினைப்போல்
தளரா துஞற்றும் தகைமையர் பின்பியார்?
வெண்கலக் கடையில் வேழம் புக்காற்போல்

125 நண்பமை புலவர் நடுவணீ போந்து
முரிப்பில் நகைச்சுவை மொழிகளை யுதிர்த்துச்
சிரிப்பு வெடியினைச் சிதற வெடிப்பாய்.
உன்னோ டிருப்பின் ஓடுங் காலம்
கொன்னே யாகாது குறியொடு கழியும்.

130 என்னே! பிரிந்துனை எவ்வா றிருப்போம்!
இனியவுன் தந்தைக் கீமச் செய்கை
தனியொரு மகனீ தகவாய்ச் செயாது,
நுந்தை யுனக்கு நொந்து செயும்படி
இந்த உலகினின் றேகினை முறையோ?

135 என்றுனைக் காண்போம் எங்குனைக் காண்போம்
என்று பலரும் இனைந்து பொருமினர்.
உலைவில் புகழுறு அம்பியின் உடல்மேல்
மலைபோல் மலரணி மாலைகள் குவித்தன.
மறக்க வொண்ணா மாண்புறு முறையில்
140 சிறக்க ஈமச் செய்கை முடிந்தபின்,

(காவிரியின் நிலை)



கம்பரும் கற்பகத் தாச்சியும் கவன்று
நம்மரு மகளிவண் நண்ணா ததேனோ?


118. முதுக் குறைவு - சிறு பருவத்திலேயே மிக்க அறிவுடைமை. 123. உஞற்றுதல் - முயன்று உழைத்தல் 126. சிரிப்புஇல்-கெடுதியற்ற 129. கொன்னே- வீணே; குறி - குறிக்கோள். 231.ஈமச் செய்கை - இடுகாட்டில் செய்யும் இறுதிக் கருமம். 133 துந்தை - நும் தந்தை. 137. உலைவு இல் - அறிவில்லாத 141. கவன்று - கவலையுற்று.