பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிகம்

19

கடவுள் வழிபாட்டுக் காதை தானும்
அனைவரும் ஆற்றா தரற்றிய காதையும்
அமராவதி மணத்த அருமைக் காதையும்

50 என்னும் முப்பான் இனிய பகுதியில்
பன்ன வரிய பன்னலம் கெழீஇய
செந்தமிழ் வளர்க்கும் சீர்மிகு புதுவைச்
சுந்தர சண்முகன், சுவைநயம் பயக்கும்
அந்தமிழ்ப் புலவன் ‘அம்பிகாபதி காதல்’

55 என்னும் காப்பியம் இனியமுதல் நூலாய்
மன்னு தமிழில் மகிழ்ந்தளித் தனனே.

50. முப்பான் முப்பது. 51. பன்ன அரிய - சொல்வதற்கு அரிய, பன்னலம் பல நலங்கள்; கெழீஇய - மிகுந்த (அளபெடை). 53. பயக்கும் - தருகின்ற. 54. அந்தமிழ் - அம்தமிழ் - அழகிய தமிழ்; அந்தமிழ்ப் புலவன் அம்பிகாபதி எனக் கொள்க. 56. மன்னும் - நிலைத்த.